நடிகையை காதலித்து மன உளைச்சலுக்குள்ளான ரகுவரன்..! யார் அந்த நடிகை தெரியுமா..?

பிரபல நடிகையை காதலித்து மன உளைச்சலுக்கு ஆளானவர் நடிகர் ரகுவரன்.

தமிழ் சினிமாவில் சிறப்பாக நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் ரகுவரன். ஆரம்பத்தில் வில்லன் கேரக்டர்களில் அதிகளவில் நடித்தவர், ஒரு கட்டத்துக்கு பிறகு குணச்சித்திர நடிகராகவும் தன்னை வெளிப்படுத்தினார்.

பாட்ஷா படத்தின் வெற்றிக்கு ரஜினியை போலவே ரகுவரனும் ஒரு முக்கிய காரணம். பல படங்களில் ரஜினிக்கு வில்லனாக நடித்து அசத்தியவர் ரகுவரன்.

இவர் நடிகை ரோகிணியை கடந்த 1996ம் ஆண்டில் திருமணம் செய்துக்கொண்டார். அந்த தம்பதிக்கு ஒரு மகன் இருக்கிறார்.

ஆனால் மதுப்பழக்கம் அதிகமாக உள்ள ரகுவரனுடன் சேர்ந்து வாழ முடியாமல், ஒரு கட்டத்தில் ரோகிணி, அவரை விட்டு பிரிந்து விவாகரத்து பெற்று விட்டார்.

ரகுவரன்..

மனைவியை பிரிந்த நிலையிலும், ரகுவரன் மதுப்பழக்கத்தை தொடர்ந்துள்ளார். குறிப்பாக மனைவியை அருகில் இல்லாத சோகமும், தனிமை தந்த விரக்தியும் இன்னும் அதிகமாக அவரை குடிக்க வைத்திருக்கிறது.

காதலால் மன உளைச்சல்..

கடந்த 1987ம் ஆண்டில் வெளிவந்த படம் கூட்டுப்புழுக்கள். இந்த படத்தில் ரகுவரன், அமலா நடித்திருந்தனர். இந்த படத்தில் நடித்த போது கதாநாயகி அமலா மீது ரகுவரனுக்கு காதல் ஏற்பட்டுள்ளது.

அதை நேரடியாக அமலாவிடம் ரகுவரன் கூறியிருக்கிறார். ஆவால் அதற்கு அமலா மறுப்பு தெரிவித்து விட்டதால், ரகுவரன் கடுமையான மன உளைச்சலில் தவித்துள்ளார்.

இதை பலமுறை நேர்காணலில் நேரடியாக ரகுவரன் வெளிப்படையாக கூறியிருக்கிறார். இந்நிலையில் தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவை, அமலா காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

சினிமாவில் கொடூர வில்லனாக நடித்தாலும், நிஜத்தில் நடிகை அமலா மீது தீராத காதல் கொண்டு இருக்கிறார் நடிகர் ரகுவரன். அந்த காதல் கைகூடாமல் போனதால், மன உளைச்சலில் தவித்திருக்கிறார்.

அது நடிகை அமலா என்பதுதான் ஆச்சரியத்தை தருகிறது. ஏனெனில், அவரும் ஒருகாலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர். ரஜினி, கமல் படங்களில் அவர்களுக்கு ஜோடியாக நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version