எம்.ஜி.ஆர் ரஜினியை அடித்தாரா..? – அன்று நடந்தது இது தான்..! – உடைந்த பல நாள் ரகசியம்..!

எம்.ஜி.ஆரிடம் அடி வாங்கினார் ரஜினி என்று ஆடிக்கு ஒரு நாள், அமாவாசைக்கு ஒரு நாள் என வதந்திகளும் கிசுகிசுகளும் இணைய பக்கங்களில் வட்டமடிப்பதை பார்த்திருக்கிறோம்.

ஆனால், இது உண்மையாக நடந்ததா..? என்றால் யாருக்கும் தெரியாது. ஆனால், சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் எம்ஜிஆர் இடையே இருந்த ஒரு பஞ்சாயத்து குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது.

இதனை வைத்து நடிகர் ரஜினிகாந்தை எம்ஜிஆர் அடித்திருப்பாரா..? அடித்திருக்க மாட்டாரா..? என்ற ஒரு முடிவுக்கு நமது தீர்க்கமாக வர முடிகிறது. அது என்ன விவகாரம் என்று பார்க்கலாம்.

நடிகர் ரஜினிகாந்த் ஆரம்பத்தில் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதன் பிறகு திருமண மண்டபம் ஒன்றை கட்டும் முயற்சி செய்யப்பட்டிருக்கிறார்.

ஆனால் அப்போது அரசியல் மற்றும் சினிமாவில் பிரபலமாக இருந்த ஒருவர் நடிகர் ரஜினிகாந்துக்கு கடுமையான அழுத்தங்களை கொடுத்திருக்கிறார்.

அவருடைய திருமண மண்டபத்தை கட்ட விடாமல் பல வழிகளில் தடுத்து இருக்கிறார். நடிகர் ரஜினிகாந்த் எவ்வளவோ முயன்றும் அவருடைய திருமண மண்டபத்தை முறையான அனுமதிகளை பெற்று கட்ட முடியாமல் போய்விட்டது.

இந்த விவகாரத்தை நடிகர் எம் ஜி ஆர் இடம் கொண்டு சென்றிருக்கிறார் ரஜினிகாந்த். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர் ரஜினிகாந்துக்கு பிரச்சனை கொடுத்த நபரை அழைத்து பேசியிருக்கிறார்.

ஒரு சினிமா நடிகர் இத்தனை நாட்களாக கஷ்டப்பட்டு பணம் சம்பாதித்து ஒரு இடத்தை வாங்கி மண்டபம் கட்ட ஆசைப்படுகிறார். அதனை ஏன் தடுக்கிறீர்கள்..? என்ன பிரச்சனை உங்களுக்கு..? என கேட்டது மட்டுமல்லாமல் ரஜினிகாந்திடம் அவருக்கு பிரச்சனை செய்தவர்களை மன்னிப்பும் கேட்க வைத்திருக்கிறார் நடிகர் எம் ஜி ஆர்.

இப்படி இருக்கும் பொழுது நடிகர் எம்.ஜி.ஆர் ரஜினிகாந்த்தை அடித்தார் என்று வரும் செய்திகளில் எப்படி உண்மையாக இருக்கும்..? ரஜினிகாந்த்-ஐ எம்.ஜி.ஆர் அடித்திருந்தால்.. எப்படி அவரிடமே பஞ்சாயத்து கேட்டு போவார் ரஜினிகாந்த் என கேள்வி எழுப்புகிறார்கள் விவரம் அறிந்து வட்டாரங்கள்.

இது குறித்து ரஜினிகாந்த் வாயை திறந்தால் தான் தெரியும். ஒருமுறை இயக்குனர் பாலச்சந்தர் விழா மேடை ஒன்றில் நடிகர் ரஜினிகாந்திடம் ஒரு கேள்வி எழுப்பினார். உன்னுடைய வாழ்க்கையை சுயசரிதையாக எழுதுவியா..? என்று கேட்டார், அதற்கு ரஜினிகாந்த், சுயசரிதை என்றால் நடந்தவற்றை அப்படியே எழுத வேண்டும். அதில் புனைவுகள், கற்பனைகள், பொய்கள் இருக்கக்கூடாது.

என்னுடைய வாழ்க்கையில் நடந்த விஷயங்களை பொய் கலக்காமல் சொல்வதற்கு தனி தைரியம் வேணும். அந்த தைரியம் எனக்கு வரும் போது கண்டிப்பாக நான் என்னுடைய சுயசாரிதையை எழுதுவேன் என பதிலளித்தார் ரஜினிகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version