“உன்னை கட்டிக்கப்போறவன் குடுத்து வச்சவன்..” குஷ்பூவிடம் நேரடியாக கூறிய முன்னணி நடிகர்..!

கொண்டையில் தாழம்பூ கூடையில் என்ன பூ.. குஷ்பூ.. என்ற பாடல் எல்லோர் மனதிலும் ஒரு காலகட்டத்தில் முணுமுணுக்கப்பட்டது. அந்த அளவு குஷ்புவின் மீது கிரஷாக இருந்த ரசிகர்கள் அவர்களுக்காக கோயிலைக் கட்டி அசத்தினார்கள்.

தற்போது குஷ்பூ திரைப்படங்கள் மட்டுமல்லாமல் சின்னத்திரைகளில் தயாரிப்பாளராக, ஒரு மிகச்சிறந்த அரசியல்வாதியாக பன்முக திறமையை கொண்டிருக்கிறார். வளரும் இளம் நடிகைகளுக்கு சவால் விடக்கூடிய வகையில் என்றும் திரை உலகில் நடித்து வரும் எவர்கிரீன் நடிகையாகவும் இருக்கிறார்.

சின்னத்தம்பி படத்தின் மூலம் ரசிகர்களின் மத்தியில் பெருமளவு விரும்பப்படக்கூடிய கதாநாயகிகளில் ஒருவராக திகழ்ந்த குஷ்பூ தமிழில் பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்திருக்கிறார்.

தொடர்ந்து இளைய திலகம் பிரபுவோடு இணைந்து பல படங்களில் நடித்த இவருக்கு பிரபுவோடு திருமணம் முடிந்து விட்டது, இருவரும் காதலிக்கிறார்கள் என்பது போன்ற கிசுகிசுக்கள் அதிகளவு பரவியது.

மேலும் இன்றும், என்றும் சூப்பர் ஸ்டார் யார் என்று கேட்டால், அது நம் ரஜினிகாந்த் என்று இன்றைய தலைமுறையும் சொல்லக்கூடிய அளவு தனது ஸ்டைலாலும், நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்திருக்க கூடிய ரஜினிகாந்த் உடன் இணைந்து குஷ்பூ நடித்திருக்கிறார்.

ரஜினியோடு அண்ணாமலை படத்தில் குஷ்பூ இணைந்து நடித்தது உங்களுக்கு ஞாபகத்தில் இருக்கலாம். அப்படி அந்த படத்தில் நடித்த போது நடந்த சம்பவம் ஒன்றுதான் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் இந்த அண்ணாமலை படத்தில் வயதான கதாபாத்திரத்தில் ரஜினியும், குஷ்புவும் நடித்திருப்பார்கள். இதில் குஷ்பூ வயதான கெட்டப்பில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த போது ரஜினி குஷ்புவை தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருந்திருக்கிறார்.

அதற்கு குஷ்பூ ரஜினியிடம் ஏன் இப்படி பார்க்கிறீர்கள் என்று கேட்க, அதற்கு ரஜினிகாந்த் உங்களை திருமணம் செய்து கொள்ளப் போகிறவன் மிகவும் கொடுத்து வைத்தவன். ஏனென்றால் இந்த வயதான கெட்டப்பிலும் நீங்கள் படு சூப்பராக அழகாக இருக்கிறீர்கள் என்று குஷ்புவை பார்த்து சொன்னாராம்.

இதனை அடுத்து அந்த அதிர்ஷ்டசாலியாக இன்று சுந்தர் சி இருக்கிறார் என்பது அன்று யாருக்கும் தெரியாது. இந்த நிகழ்வைத்தான் தற்போது அனைவரும் பேசும் பொருளாக பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version