நடிகர் விஜயகாந்த் சினிமாவில் அறிமுகமான புதிதில் ரஜினியால் அசிங்கப்பட்ட ஒரு நிகழ்வை தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.
நடிகர் ரஜினிகாந்த் சினிமா துறையில் உயரிய அந்தஸ்தில் இருப்பவர் அவரால் சினிமாவில் அசிங்கப்பட்டவர்கள் யாரும் கிடையாது. இப்போது விஜயகாந்த் அசிங்கப்பட்டார் என்று கூறுகிறீர்களே..? இது என்ன கதையாக இருக்கிறது…! என்று நீங்கள் கேட்கலாம்.
நடிகர் ரஜினியால் தான் விஜயகாந்த் அசிங்கப்பட்டு இருக்கிறார். இது நூறு சதவீதம் உண்மை. ஆனால், நடிகர் ரஜினிகாந்த்தால் நேரடியாக விஜயகாந்த் பாதிக்கப்படவில்லை. நடிகர் ரஜினிகாந்தின் மேனரிசம் மற்றும் ஸ்டைல் ஆகியவற்றால் நடிகர் விஜயகாந்த் பாதிக்கப்பட்டிருக்கிறார்.
எப்படி என்று பார்க்கலாமா..? நடிகர் விஜயகாந்த் ஆரம்பத்தில் பட வாய்ப்புகள் தேடிக் கொண்டிருந்த பொழுது சில திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
ஆனால் படத்தில் ஹீரோவாக நடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட பொழுது அவருடைய ஸ்டைலில் ரஜினியுடைய முகபாவனைகள் ரஜினி உடைய தோரணை கலந்து இருக்கிறது.
ஏனென்றால் அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை ரஜினியின் ரசிகர்கள் என்றாலே அவர்களுக்குள் ஒரு குட்டி ரஜினி இருப்பார். அவருடைய ஸ்டைல் பேசும் வழக்கம் ஏதாவது ஒரு விஷயத்தில் சிறிய ஆள்விலாவது ரஜினியின் மேனரிஷம் கண்டிப்பாக இருக்கும்.
அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்தின் ஸ்டைலில் ஈர்க்கப்பட்ட நடிகர் விஜயகாந்த் அவருடைய ஸ்டைலில் சில விஷயங்களை செய்திருக்கிறார். மட்டுமில்லாமல் விஜயராஜ் என்ற தன்னுடைய பெயரை விஜயகாந்த் என மாற்றிக்கொண்டார்.
அப்போது தயாரிப்பாளர் ஒருவர் இவரை பார்த்து கருப்பாக இருந்தால் நீ ரஜினிகாந்த் என்று நினைப்பா…? நீ செய்வதெல்லாம் ரஜினிகாந்த் போலவே இருக்கிறது.. என்று அவமானப்படுத்தி அனுப்பி இருக்கிறார்.
அதன்பிறகு தன் நிலை உணர்ந்து கொண்ட விஜயகாந்த் தனக்கென தனி ஸ்டைலை உருவாக்கி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கேப்டனாக உருவாகி எதிர்க்கட்சித் தலைவராகும் அளவுக்கு உயர்ந்தார் என்பது தனிக்கதை.