கர்ணன் ஹீரோயின் ரஜிஷா விஜயன் திருமணம்..! மாப்பிள்ளை யாருன்னு பாருங்க..!

நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து பிறகு, மலையாளத்தில் நடிகையாக அறிமுகமானவர் ரஜிஷா விஜயன். இவர் கேரள அரசின் சிறந்த நடிகை விருது பெற்றவர்.

மலையாளத்தில் வெல்லம்தான் இவரது முதல் படம். 2016ல் வெளியான இந்த அறிமுக படத்திலேயே கேரள அரசின் சிறந்த நடிகை விருது ரஜிஷா விஜயனுக்கு கிடைத்தது.

தொடர்ந்து மலையாளத்தில் பல படங்களில் நடித்தார். சில படங்களில் இவரது நடிப்பு சிறப்பாக இருந்ததால், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

நிறைய மலையாள படங்களில் நடித்து வருபவர் ரஜிஷா விஜயன். இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த கர்ணன் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார்.

தொடர்ந்து சர்கார், ஜெய்பீம் போன்ற படங்களில் நடித்திருந்தார். தமிழில் சில படங்களில் நடித்த நிலையில், மலையாள பட ஒளிப்பதிவாளர் டோபின் தாமஸ் என்பவரை ரஜிஷா விஜயன் காதலிக்கிறார்.

ரஜிஷா விஜயன் திருமணம்..

இந்நிலையில் ரஜிஷா விஜயன் திருமணம் நடப்பதற்கான சூழல் உருவாகி உள்ளது. அவர்கள் இருவரும் மிக விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

டோபின் தாமஸ், ரஜிஷா விஜயன் இருவரும் ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை, டோபின் தாமஸ் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில், இன்னும் 1461 நாட்கள், இன்னும் ஒரு பயணம் செல்ல காத்துக்கொண்டு இருக்கிறேன், என்று குறிப்பிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மாப்பிள்ளை யாரு..?

ரஜிஷா விஜயனை திருமணம் செய்துக்கொள்ள போகிற மாப்பிள்ளை யார் என்றால் பிரபல மலையாள பட ஒளிப்பதிவாளர் டோபின் தாமஸ்.

அன்புடன் உங்கள் வேதா, கோ கோ, கல்லா தோட்டம் போன்ற படங்களில் ஒளிப்பதிவாளராக டோபின் தாமஸ் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கர்ணன் பட ஹீரோயின் ரஜிஷா விஜயன், விரைவில் டோபின் தாமஸை திருமணம் செய்துக்கொள்ள இருக்கிறார். திருமணத்துக்கு பின் நடிப்பாரா, இல்லையா என்பது பின்னர்தான் தெரிய வரும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version