அன்றே சொன்னார் ராஜ்கிரண்.. காதலால் நடுத்தெருவுக்கு வந்த ராஜ்கிரண் மகள்..!

நடிகர் ராஜ்கிரண் பன்முக திறமையை கொண்டவர். இவர் நடிகராக இருந்ததோடு மட்டுமல்லாமல் சில படங்களை இயக்கவும், தயாரிக்கவும் செய்திருக்கிறார். இவரது இயற்பெயர் காதர் என்பதாகும்.

தமிழ் திரை உலகில் கவுண்டமணி, செந்தில் பிறகு காமெடியில் முன்னணி நடிகராக இருக்கக்கூடிய வடிவேலுவை தன் படத்தில் அறிமுகப்படுத்தி வைத்தவர் ராஜ்கிரண்.

ராஜ்கிரண்..

நடிகர் ராஜ்கிரண் என்னை பெத்த ராசா, என் ராசாவின் மனசிலே, அரண்மனைக்கிளி, வேங்கை, முனி, கிரீடம், பாண்டவர் பூமி, நந்தா, சண்டைக்கோழி, திருத்தணி போன்ற பல படங்களில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

இந்நிலையில் இவரது வளர்ப்பு மகளான பிரியா காதல் கண்ணை மறைக்க தந்தை சொல்லை கேட்காமல் சின்ன திரையில் நடித்து வந்த முனீஸ் ராஜா என்பவரை 2022 ஆம் ஆண்டு பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார்.

இதனை அடுத்து கடுமையான சோகத்தில் இருந்த ராஜ்கிரண், அவரை தன்னுடைய மகளே கிடையாது என்று செய்தியை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அதுமட்டுமல்லாமல் பணத்திற்காக தான் சீரியல் நடிகர் முனிஸ் ராஜா தன் வளர்ப்பு மகளை திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

அவருக்கு பணம் தான் முக்கியம் அதற்காகத்தான் இந்த திருமண நாடகம் போடுகிறார்கள் என்று கூற அதை பிரியா மறுத்து இருந்தது கூட உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

அதுமட்டுமல்லாமல் நடிகர் ராஜ்கிரணின் இந்த சொல்லுக்கு பதிலடியாக தாங்கள் இருவரும் உண்மையில் காதலிக்கிறோம். எங்களை வெறுத்தவர்களின் முன்பு நன்றாக வாழ்ந்து காட்டுவோம் என்று பேட்டி ஒன்றில் பிரியா மற்றும் நடிகர் முனீஸ் ராஜா கூறி இருந்தார்கள்.

திருமணம் செல்லாது..

இந்நிலையில் தற்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. பிரியா கண்ணீரோடு கையெடுத்து கும்பிட கூடிய ஒரு உருக்கமான வீடியோ வெளியாகி அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பியுள்ளது.

ஏற்கனவே ஒரு வீடியோவில் பிரியா இதுபோல பெற்றோரின் எதிர்ப்பை மீறி தான் காதலித்த நபரை திருமணம் செய்து கொண்டதாகவும் எங்கள் காதல் வாழ்க்கையில் உறுதியாக இருந்ததால் தான் குடும்பத்தாரின் எதிர்ப்பை மீறி நான் திருமணம் செய்து கொண்டிருந்தேன் என கூறி இருக்கிறார்.

அத்தோடு பேஸ்புக் மூலமாகத்தான் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது என்ற விஷயத்தை கூட பிரியா முனீஸ் ராஜா தெரிவித்து இருந்தார்கள். இது ராஜ்கிரணின் மகள் என்ற செய்திகள் பரவ அவர் கூட வளர்ப்பு மகள் என்ற நிலையை உறுதிப்படுத்தி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தன் வளர்ப்பு தந்தையின் பேச்சைக் கேட்காமல் காதல் தான் முக்கியம் என்று கண்மூடித்தனமாக முனீஸ் ராஜாவை திருமணம் செய்து கொண்ட பிரியாவின் கண்ணீர் வீடியோ வலைதளங்களில் அதிரடியாக பரவி காதல் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு சகலத்தையும் யோசிக்க வேண்டும் என்ற நிலையை உறுதிப்படுத்தி உள்ளது.

மேலும் இந்த வீடியோவில் கண்ணீரோடு பேசி இருக்கும் பிரியா நான் 2022 ஆம் ஆண்டு முனீஸ் ராஜாவை திருமணம் செய்து கொண்டேன் என்பது மீடியாவின் மூலம் பலரும் அறிந்திருக்கலாம்.

ஆனால் நாங்கள் திருமணத்திற்கு பிறகு பிரிந்து விட்டோம். இப்போது இருவரும் சில மாதங்களாக பிரிந்து தான் வாழ்ந்து வருகிறோம். மேலும் எங்களுடைய திருமணம் சட்டபூர்வமான திருமணம் கிடையாது என்ற நிலையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இப்படி ஒரு நிலை ஏற்படும் என்று அன்றே உணர்ந்து தான் ராஜ்கிரண் காதலால் நடுத்தெருவுக்கு வரக்கூடிய சூழ்நிலை ஏற்படும் என்று சொன்னாரா?. தற்போது அந்த நிலையில் தான் அவரது வளர்ப்பு மகள் காதலால் நடுத்தெருவிற்கு வந்துவிட்டார் என கூறலாம்.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Exit mobile version