இப்படித்தான் சினிமாவில் வளர்ந்தேன்.. இதை சொல்வதில் தயக்கம் இல்ல.. ரகுல் ப்ரீத் சிங்..!

தமிழில் சொற்ப எண்ணிக்கையிலான படங்களில் நடித்தாலும் மிக விரைவில் ரசிகர்களின் மனங்களில் சில நடிகர், நடிகையர் எளிதில் இடம் பிடித்து விடுகின்றனர். அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இல்லாத போதும், அவர்களுக்கான இடம் ரசிகர்கள் நிரந்தரமாக தந்து விடுகின்றனர்.

அந்த வகையில் ரகுல் ப்ரீத் சிங், ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு அழகான நடிகை. 2014ம் ஆண்டில் இந்தி படவுலகில் யாரிவன் என்ற படம்தான் இவரை அறிமுகப்படுத்தியது. தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்தார். தமிழ் ரசிகர்களின் அன்புக்குரிய ஒரு நடிகையாக மாறினார்.

யுவன், தடையற தாக்க, புத்தகம், தீரன் அதிகாரம் ஒன்று, என்னமோ ஏதோ, தேவ், என்ஜிகே ஆகிய படங்களில் தீரன் அதிகாரம் ஒன்று மட்டுமே பெரிய அளவில் பேசப்பட்ட படமாக ரசிகர்கள் மத்தியில் அமைந்தது. இன்று சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான் படத்திலும் இவர் நடித்திருக்கிறார்.

ரகுல் ப்ரீத் சிங், சினிமா உலகிற்கு வந்து 10 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி அவர் தனது ஆரம்பகால புகைப்படம் ஒன்றையும், தற்போதைய புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டு ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவு இப்போது வைரலாகி வருகிறது.

நான் நிறைய அழகான கனவுகளோடு, 10 ஆண்டுகளுக்கு முன் இந்தி படவுலகில் காலடி எடுத்து வைத்தேன். எனது உழைப்பு, கடுமையான முயற்சியால் இந்த நிலைக்கு உயர்ந்தேன். ஒரு நடிகையாக இன்னும் நிறைய நான் சாதிக்க வேண்டும். உற்சாகமாக பணியாற்றி நிறைய இன்னும் சாதிப்பேன். நான் இந்த நிலைக்கு வர உதவிய அனைவருக்கும் நன்றி என அந்த பதிவில் கூறியுள்ளார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version