வாலி படத்தில் முதலில் நடிக்க இருந்தது யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..?

1990-களில் திரை உலகில் ரம்பாவாக பவனி வந்த நடிகை ரம்பா ரசிகர்களின் மனதில் நீங்காத பூலோக ரம்பையாக இருந்தவர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இவரது உண்மையான பெயர் விஜயலட்சுமி என்பதாகும்.

இவர் தெலுங்கில் “ஆ ஒக்கடி அடக்கு” என்ற திரைப்படத்தில் ரம்பா என்ற கதாபாத்திரத்தை செய்து மாபெரும் வெற்றியை அடைந்தார். அதனை அடுத்து அந்தப் பெயரினையே சினிமாவில் தனது பெயராக மாற்றிக்கொண்டார்.

இதனை அடுத்து தமிழில் சுந்தர் சி யின் மூலம் ஹீரோயினியாக அறிமுகப்படுத்தப்பட்ட ரம்பா உள்ளத்தை அள்ளிதா திரைப்படத்தின் மூலம் மக்களின் மனதை அள்ளிச் சென்றார். இந்த திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது.

இதனை அடுத்து பல பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது. இவர் தமிழில் முன்னணி நாயகர்களாக திகழ்ந்த விஜய், அஜித், கமல், ரஜினி என அனைத்து முக்கிய நடிகர்களோடும் இணைந்து நடித்திருக்கிறார்.

அடுத்து இவர் 2010 ஆம் ஆண்டு இந்திரகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகி விட்டார். தற்போது கனடாவில் செட்டில் ஆகிவிட்ட இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளது.

தற்போது மீண்டும் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டுள்ளதால் அதற்கு ஏற்றது போல் இருக்கும் கதைகளை கேட்டு வருகிறார். எனவே விரைவில் இவரது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பிப்பார் என நம்பலாம்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசும் போது அஜித் படத்தை தான் மிஸ் பண்ணியது குறித்து சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார். எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் வெளி வந்த மாபெரும் ஹிட் படமான வாலி திரைப்படத்தில் ஹீரோயினியாக நடிக்க இருந்தது ரம்பா தான்.

மேலும் அந்தப் படத்திற்காக போட்டோ ஷூட் நடத்தி இருக்கிறார். ஆனால் அந்த படத்தின் கதாபாத்திரத்தில் தனக்கு சில குழப்பங்கள் இருந்ததின் காரணத்தால் நடிக்க மறுத்துவிட்டாராம். இருந்தாலும் அந்த படத்தில் நடிக்க தவறியது குறித்து வருத்தம் ஏற்படவில்லை என்ற கருத்தை பதிவு செய்திருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் நடித்த சிம்ரன் தனது கேரக்டரை மிகவும் அற்புதமான முறையில் செய்துள்ளதாகவும், தானே அந்தப் படத்தில் நடித்திருந்தால் கூட இந்த அளவுக்கு நடித்திருப்பேனா? என்பது சந்தேகம் தான் என்பதை வெளிப்படுத்தி இருக்கிறார்.

அத்தோடு வாலி படத்தில் தன்னால் அஜித்தோடு இணைந்து நடிக்க முடியாவிட்டாலும், ராசி படத்தில் அஜித்தோடு சேர்ந்து நடித்து விட்டேன் என மகிழ்ச்சியோடு தெரிவித்து இருக்கிறார். இந்த பேச்சு தான் தற்போது இணையத்தில் வைரலாகிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version