“தமிழ் நடிகர்களுக்கு அது இவ்வளவு தான்..” ரம்பாவின் செயலால் கடுப்பான ரஜினி..!

கோலிவுட் திரை உலகில் கவர்ச்சி நாயகியாக ரசிகர்கள் விரும்பும் கனவு கன்னியாக திகழ்ந்தவர் நடிகை ரம்பா. இவர் 1990-களில் பல முன்னணி தமிழ் நடிகர்களோடு இணைந்து நடித்து இருக்கிறார்.

இதனை அடுத்து 1996-ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளி வந்த “உள்ளத்தை அள்ளித்தா” என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து இந்த படம் மாபெரும் வெற்றியை தந்தது.

மேலும் இவர் சுந்தர் சி இயக்கிய ரஜினிகாந்த் நடித்த “அருணாச்சலம்” திரைப்படத்தில் ரஜினியின் பிஏ கேரக்டர் ரோலில் நடித்திருந்தார். இந்தத் திரைப்படம் ஆனது படம் பிடிக்கப்பட்ட சமயத்தில் ரஜினி ரம்பாவை செய்த கலாட்டாவால் அவர் கண்ணீர் விட்டு அழுததாக அதிர்ச்சிகரமான தகவலை கூறியிருக்கிறார்.

“அருணாச்சலம்” படத்தில் நடிக்கும் போது பாலிவுட் நடிகர் சல்மான்கான் உடன் தான் “பந்தன்” என்ற திரைப்படத்தில் நடித்து வந்ததாக கூறியவர், இரண்டு படங்களின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடைபெற்றதின் காரணமாக காலை முதல் மதியம் வரை அருணாச்சலம் படத்திலும் அதன் பின் ஹிந்தி படத்தில் நடித்ததாக கூறியிருக்கிறார்.

இதனை அடுத்து ஒரு நாள் ரஜினிகாந்தை பார்ப்பதற்காக சல்மான்கான் அருணாச்சலப்பட செட்டுக்கு வந்தார். அவர்களைப் பார்த்ததும் நான் நம்ம ஹீரோ வந்திருக்கிறார் என முதலில் சென்று கட்டிப்பிடித்து வரவேற்றேன். இதை தூரத்தில் இருந்து ரஜினி சார் பார்த்துக் கொண்டே இருந்தார்.

அவர்கள் திரும்பி சென்ற பிறகு செட்டே பரபரப்பாகி விட்டது. ரஜினிகாந்த் சார் கோபமாக பேசிக் கொண்டிருந்தார். இதனை அடுத்து சுந்தர் சி என்னை பார்த்தார். எனக்கு என்ன நடந்தது என்று புரியவில்லை.

இந்நிலையில் கேமராமேன் வந்து இனி மேல் அவர் உங்களோடு நடிக்க மாட்டார் என்று கூறியிருக்கிறார் என்று கூற, என்னையும் தாங்காமல் அழுகை வந்துவிட்டது. அதை பார்த்து பதறிப் போய் வந்த ரஜினி எதற்காக பிள்ளையை அழ வைத்தீர்கள் என்று என் அம்மாவிடம் கேட்டார்.

மேலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த எல்லோரையும் கூப்பிட்டு லைனில் நிக்க வைத்து காலையில் சல்மான்கான் வந்த போது ரம்பா எப்படி ஓடிப்போய் கட்டிப்பிடித்தாரோ, அது போல தினமும் நாம் செட்டுக்கு வந்ததும் செய்ய வேண்டும். அதை விடுத்து நமக்கு குட் மார்னிங் மட்டும் சொல்லுவது சரி அல்ல என்றார்.

அதற்கு நான் அது வட நாட்டு கலாச்சாரம் என்று கூற, அது சரி நாளை முதல் யூனிட்டில் எல்லாரையும் நிக்க வைப்பாங்க வந்து எல்லாரையும் கட்டிப்பிடிக்கணும் என்று சொன்னாரு. சுந்தர் சி-யும் இதற்கு தலையாட்டிகிட்டு இருந்தார். இதை பார்த்து நான் ரொம்பவே பயந்து விட்டேன் என்ற செய்தியை கூறியிருக்கிறார்.

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் ரஜினி சார்..ரா.. இப்படி? ரம்பாவை கலாட்டா செய்தது, நம்பவே முடியவில்லை என்ற ரீதியில் அவர்களுக்குள் பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version