“என்கிட்ட இல்லாதது அவகிட்ட என்ன இருக்கு..?” கணவரை கவர்ந்த இளம் நடிகை..! ரம்பா கதறல்..!

நவரச நாயகன் நடித்த “உள்ளத்தை அள்ளித்தா” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை அள்ளி சென்ற ரம்பா ரசிகர்களின் மனதில் பூலோக ரம்பையாக தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார்.

இதனை அடுத்து தமிழில் இவர் செங்கோட்டை, அருணாச்சலம், காதலா காதலா, மின்சார கண்ணா, ஆனந்தம் போன்ற பல படங்களில் தொடர்ந்து நடித்து தனது அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்.

தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளில் நடித்திருக்க கூடிய நடிகை ரம்பா தமிழில் முன்னணி நாயகர்களோடு ஜோடி போட்டு நடித்து இருக்கிறார்.

திரை உலகில் பீக்கில் இருக்கும் போதே 2010-ம் ஆண்டு இந்திரகுமார் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். திருமணத்தை அடுத்து இவர் திரைப்படங்களில் நடிப்பதையும் நிறுத்திவிட்டார். தற்போது இவருக்கு ஒரு மகனும், இரண்டு மகளும் இருக்கிறார்கள்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு வரும் இவர் மீண்டும் திரைப்படங்களில் ஒரு ரவுண்ட் வர விருப்பம் கொண்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருக்கும் நடிகை ரம்பா நான் இன்னும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் என்னுடைய கணவரின் கணக்கை ஃபாலோ செய்யவில்லை. இதற்கு என்ன காரணம் என்ன தெரியுமா? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்.

ரசிகர்கள் எவ்வளவு யோசித்தும் அதற்கான பதிலை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே அதற்கு உரிய பதிலையும் தற்போது ரம்பா அவர்களே தெரிவித்திருக்கிறார். அந்த பதிலில் அவர் என்ன கூறியிருக்கிறார் என்பதை பார்க்கலாம்.

இதற்குக் காரணம் திருமணம் ஆன பிறகு அவரிடம் என்னுடைய இன்ஸ்டா கணக்கை ஃபாலோ செய்யுங்கள் என்று கூறினேன். ஆனால் அவர் இன்று வரை எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஃபாலோ செய்யவில்லை என்று கடுப்பாக கூறி இருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் அவர் தமன்னாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஃபாலோ செய்து வருவதால், நான் இனி மேல் அவரது பக்கத்தை ஃபாலோ செய்யமாட்டேன். அவர் என் பக்கத்தை முதலில் ஃபாலோ செய்ய வேண்டும் என தெரிவித்து இருக்கக்கூடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version