கல்யாணமாகி 21 வருஷம் ஆச்சு.. இப்போ வந்து அதை கேக்குறாங்க.. ரம்யா கிருஷ்ணன் தடாலடி பதில்..!

மனிதர்களின் வாழ்க்கையில் இளமை, வயது குறையாத நிலையில் எப்போதும் பொலிவாக இருப்பவர்களை மார்கண்டேயன் என்று கூறுவார்கள். நடிகர் சிவக்குமாருக்கு திரையுலக மார்க்கண்டேயன் என்ற பட்டப்பெயர் உண்டு.

நடிகைகளில் அப்படி ஒருவரை குறிப்பிட்டு கூற வேண்டும் என்றால், அது நீலாம்பரி கேரக்டராக வாழ்ந்த நடிகை ரம்யாகிருஷ்ணனுக்கு கண்டிப்பாக பொருந்தும்.

ஏனெனில் 53 வயதான நிலையிலும், அவரது கட்டுக்குலையாத மேனி அழகும், பளபளப்பான உடல் வளமையும், அழகும் இப்போதும் கூட அவரை ரசிக்க வைக்கிறது.

1980களின் பிற்பகுதியில் நடிக்க வந்தவர் ரம்யாகிருஷ்ணன். ஆரம்ப காலத்தில் முதல்வசந்தம், படிக்காதவன், பேர் சொல்லும் பிள்ளை போன்ற படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்தார்.

அதன்பிறகு ரம்யாகிருஷ்னண் தமிழில் மட்டுமின்றி தெலுங்கில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார்.

தெலுங்கில் பல படங்களில் நடித்த போது, கடந்த 2003ம் ஆண்டில் தெலுங்கு பட இயக்குநர் கிருஷ்ணவம்சியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு மகன் இருக்கிறார்.

ரம்யா கிருஷ்ணன்..

தமிழ், தெலுங்கு படங்களில் கதாநாயகியாக மட்டுமின்றி இந்திய அளவில் நடிகையாகவும் பாராட்டை பெற்றவர் ரம்யாகிருஷ்ணன்.

குறிப்பாக படையப்பா படத்தில் அவரது நீலாம்பரி கேரக்டரும், பாகுபலி படத்தில் அவர் ஏற்றுநடித்த ராஜமாதா சிவகாமி கேரக்டரும் சினிமா வரலாற்றில் நின்று பேசும் படங்களாக அமைந்துவிட்டன.

ரம்யாகிருஷ்ணன், மற்றொரு மிக சுவாரசியமான தகவல், அவர் நடிகர் சோ ராமசாமியின் அக்கா மகள். அதாவது சோ, ரம்யாகிருஷ்ணனின் தாய்மாமா.

துவக்கத்தில் ரம்யாகிருஷ்ணனை சினிமாவில் நடிக்க வேண்டாம் என மறுத்த சோ, நீலாம்பரி போன்ற கேரக்டரில் நடித்து ரம்யாகிருஷ்ணன் முக்கிய நடிகையாக மாறிய பிறகு, அழைத்து பாராட்டியிருக்கிறார்.

விவாகரத்து தகவல்..

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக ரம்யாகிருஷ்ணனும், அவரது கணவர் கிருஷ்ணவம்சியும் பிரிந்து வாழ்வதாகவும், இருவரும் விவாகரத்து செய்துவிட்டதாக தகவல் பரவி வருகிறது.

இந்த விவாகரத்து தகவல் குறித்து சமீபத்தில் ஒரு வீடியோவில் நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பேசியிருக்கிறார்.

அவர் கூறியதாவது, ஒருமுறை விமான நிலையத்தில் இருந்து வௌியே வந்த ரம்யாகிருஷ்ணனிடம் ஒரு நிருபர், உங்களுக்கு விவாகரத்து நடந்துவிட்டதா, நீங்களும் உங்கள் கணவரும் பிரிந்து வாழ்கிறீர்களா, என்று கேட்டு விட்டார்.

இதனால் கோபமடைந்த ரம்யாகிருஷ்ணன், லூசு மாதிரி பேசாதீங்க, நான் சினிமாவில் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கிறார். அவருடைய கேரியரில் அவர் பிஸியாக இருக்கிறார், என்று கூறிவிட்டு சென்றார் என பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.

கல்யாணமாகி 21 வருஷம் ஆச்சு. இப்போது வந்து உங்களுக்கு விவாகரத்து ஆகிவிட்டதா என்ற கேக்குறாங்க என்ற கோபத்தில் தடாலடி பதில் தந்திருக்கிறார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version