மாசக்கணக்குல சாப்பிடல போல இருக்கு.. எலும்பும் தோலுமாய் மாறிய ராஷி கண்ணா..! வைரல் போட்டோஸ்..!

தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கொழுக் மொழுக் நடிகைகள் என்றாலே தனி வரவேற்புதான். அப்படித்தான் குஷ்பு, மந்த்ரா, ஷகிலா, நக்மா போன்றவர்களுக்கு ஒருகாலகட்டத்தில் நல்ல மார்க்கெட் இருந்தது. அதேபோல் இப்போது நடிக்கும் சில நடிகைகளும் சற்று பருமனாக காணப்பட்டாலும் ரசிகர்கள் ஏற்றுக்கொள்கின்றனர்.

ஆனால் உடல் பருமனாக இருப்பவர்கள் ஒருகட்டத்தில் உடல் பெருத்துப்போய் அவர்களது அழகையே இழந்துவிடுகின்றனர். அதற்கு சமீபத்திய உதாரணமாக நடிகை அனுஷ்காவை சொல்ல முடியும். வேட்டைக்காரன், சிங்கம் படங்களில் ஸ்லிம்மான நாயகியாக விஜய், சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த அனுஷ்கா, இப்போது எந்த படத்திலும் நடிக்க முடியாமல் முடங்கிப் போயிருக்கிறார். இதற்கு காரணம் அவரது உடல் பருமனான தோற்றம்தான்.

இஞ்சி இடுப்பழகி படத்துக்காக, அந்த படத்தின் கேரக்டரில் குண்டான உடல்வாகு கொண்டவராக அவர் உடல் எடையை அதிகரித்துக் கொண்டார். ஆனால் அதற்கு பிறகு அவர் உடல் எடை குறையவே இல்லை. அதனால் குண்டான உடல்வாகு கொண்ட அவருக்கு படங்களில் நடிக்கவே வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

அப்படி உடல்வாகு மாறிவிடக் கூடாது என்பதற்காக நடிகை ராஷிகண்ணா தன் உடம்பை ஸ்லிம்மாக மாற்றி இருக்கிறார். உடற்பயிற்சி கூடத்தில் எந்நேரமும் இருந்து, தனது உடல் எடையை பாதியாக குறைத்திருக்கிறார். இமைக்கா நொடிகள், சர்தார், அரண்மனை 3, திருச்சிற்றம்பலம், அடங்க மறு, அயோத்தியா ஆகிய படங்களில் நடித்துள்ளார். இப்போது அரண்மனை 4, மேதாவி படங்கள் அடுத்து அவரது நடிப்பில் வெளிவர உள்ளது.

உடல் எடை குறைப்பு என்ற பெயரில், தன் அசத்தலான அழகை இழந்து ஒல்லிக்குச்சியாக காட்சியளிக்கும் ராஷிகண்ணா புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இதுக்கு மேல் உடம்பை குறைத்தால், ஓமக்குச்சி ராஷிகண்ணா ஆகிவிடுவார் என்று ரசிகர்கள் பலரும் கலாய்த்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version