இணையத்தில் லீக் ஆன வீடியோ.. பதறமால் ராஷ்மிகா கொடுத்த பதிலை பாருங்க..!

கன்னடம், தமிழ், தெலுங்கு மலையாள படங்களில் அதிக அளவு நடித்து இருக்கும் ராஷ்மிகா மந்தானா 2016 ஆம் ஆண்டு வெளி வந்த கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

டீப் பேக் தொழில்நுட்பத்தின் காரணமாக பல்வேறு பாதிப்புகளை நடிகைகள் மட்டுமல்லாமல் திரை துறையைச் சார்ந்தவர்களும் சாமானியர்களும் சந்தித்து வருகிறார்கள். அந்த வகையில் இணையத்தில் தற்போது லீக்கான வீடியோ குறித்து ராஷ்மிகா கொடுத்த பதில் என்ன தெரியுமா?

லீக்கான வீடியோ..

கணினி தொழில்நுட்பம் விண்ணை தொடும் அளவிற்கு வளர்ச்சி அடைந்த காரணத்தால் பல நடிகைகளை பாதிக்க கூடிய வகையில் இணையத்தில் டீப் பேக் வீடியோக்கள் வெளி வந்து மனிதர்களை மிரட்டி வருகிறது.

அந்த வகையில் தென்னிந்தியாவின் கிரஷ்ஷாக திகழும் நடிகை ராஸ்மிகா இந்த வகையான டீப் பேக் தொழில்நுட்பத்தின் மூலம் வெளி வந்த வீடியோவால் கடுமையான இன்னங்களை சந்தித்தார்.

இதனை அடுத்து திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த வீடியோவுக்கு எதிராக கருத்துக்களை பதிவு செய்ததோடு மட்டுமல்லாமல் இது போன்ற அவலம் மீண்டும் நிகழக்கூடாது.மேலும் சட்டத்தினால் கடுமையாக அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்தார்கள்.

எனினும் இன்று வரை தொடர்கதையாக நீடித்து வரக்கூடிய இந்த விஷயம் பரவலாக அனைவரையும் பயமுறுத்தி வருவதோடு சட்ட ரீதியாக தக்க நடவடிக்கை எடுத்து இரும்பு கரம் கொண்டு இதை ஒடுக்க வேண்டும் என்பதில் திரை உலகத்தை சார்ந்த அனைவரும் ஒருமித்த கருத்தோடு இருக்கிறார்கள்.

ராஷ்மிகா பதில்..

ராஷ்மிகா மந்தனா, விஜய தேவரகொண்டாவுடன் காதலில் இருப்பதாக அடிக்கடி வதந்திகள் கிளம்பி வருவதோடு மட்டுமல்லாமல் அதை உறுதி செய்யக் கூடிய வகையில் புகைப்படங்களும், வீடியோக்களும் வெளி வந்து ரசிகர்களின் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிடும்.

இதனை எல்லாம் ஒரு பொருட்டாக எண்ணாமல் திரைப்படங்களில் நடிப்பதை மட்டுமே கவனத்தை செலுத்தி வரும் இவர் தற்போது பாலிவுட்டிலும் சக்கை போடு போடும் நடிகையாக மாறிவிட்டார்.

பெண்களை படு ஆபாசமாக சித்தரிக்கக் கூடிய இது போன்ற அவலங்கள் இனியும் தொடராமல் இருக்க அரசு மட்டுமல்லாமல் அனைவரும் விழிப்புணர்வோடு இருப்பது மிகவும் அவசியமானதாகும்.

அந்த வகையில் இந்த நிகழ்வின் மூலம் பாதிப்படைந்து இருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனாவிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. குறிப்பாக இணையத்தில் லீக்கான அந்த வீடியோவை பற்றி கேள்வியை எழுப்பினார்கள்.

இந்த கேள்வியானது அனிமல் படத்தின் விழாவில் கேட்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இணையத்தில் மார்ஃபிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட உங்களுடைய ஆபாச வீடியோ குறித்து கருத்து என்ன என்று கேட்கப்பட்டதற்கு நடிகை ராஷ்மிகா அது துரதிஷ்டவசமானது என்று பதிலளித்தார்.

அது மட்டுமல்லாமல் அனிமல் படம் சார்ந்த விழா இங்கு நடப்பதால் அந்த நிகழ்வு பற்றி பேசுவது சரியாக இருக்காது. எனவே அனிமல் படத்தைப் பற்றி மட்டுமே பேசலாம் என மிகவும் கூலாக பதறாமல் சொல்லியது பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.

இதனை ரசிகர்கள் அனைவரும் எப்படி இந்த நிகழ்வை மிகக் கூலாக எடுத்துக் கொண்டு இவர் ஹேண்டில் செய்திருக்கிறார். உண்மையிலேயே புத்திசாலித்தனமாக நடந்து கொண்டிருக்கிறார் என்று இவரை பாராட்டி தள்ளி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version