கத்திரிக்காய் முத்தின கடைக்கு வந்து தானே ஆகணும்..! சோகத்தில் மூழ்கிய நேஷனல் கிரஷ் ஃபேன்ஸ்..!

நேஷனல் கிரஸ் நடிகையாக விளங்கும் ராஷ்மிகா மந்தானா மற்றும் விஜய தேவரகொண்டா பற்றி சமூக ஊடகங்களில் அதிக அளவு கிசுகிசுக்கள் வெளி வந்த வண்ணம் இருந்தது.

அந்த கிசுகிசுக்களை உண்மையாக கூடிய வகையில் அவர்கள் வெளியிடுகின்ற போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் அவர்கள் டேட்டிங் சென்றதை உறுதிப்படுத்தக் கூடிய வகையில் இருந்ததை அடுத்து இவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்பது போன்ற தகவல்கள் தாறுமாறாக இணையத்தை ஆக்கிரமித்தது.

இவர்கள் இருவரும் இணைந்து நடித்த கீதா கோவிந்தம் படத்தில் காட்டிய நெருக்கம் இவர்களுக்குள் இருந்த கெமிஸ்ட்ரி இந்த படத்தை வெற்றியடைய செய்ததோடு மட்டுமல்லாமல் பட்டி தொட்டி எங்கும் இவர்களுக்கு முகவரியை பெற்று தந்தது.

இந்நிலையில் 2019 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே இவர்கள் இருவரும் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் செய்திகள் பரவிய வேளையில், நாங்கள் காதலிக்கவில்லை நல்ல நண்பர்கள் என இருவரும் விளக்கம் அளித்தார்கள்.

இவர்கள் என்ன தான் விளக்கத்தை தந்தாலும் அதனை எவரும் நம்புவதாக தெரியவில்லை. இந்நிலையில் தான் கடந்த ஐந்து ஆண்டுகளாக இவர்களது விஷயம் ஹாட் டாப்பிக்காக மாறியது.

இந்நிலையில் தற்போது தெலுங்கு ஊடகங்களில் வரும் பிப்ரவரி மாதம் காதலர் தினத்தன்று இவர்கள் நிச்சயதார்த்தம் செய்து கொள்ள வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இந்த தகவல் குறித்து இருவரும் எந்த விதமான மறுப்பும் தெரிவிக்காத நிலையில் இது உண்மையாக இருக்குமோ என்று சந்தேகங்கள் எழுந்துள்ளது.

தற்போது இருவரும் வளர்ந்து வரக்கூடிய நேரத்தில் திருமணம் செய்து கொள்வது என்பது நம்பக்கூடிய வகையில் இருக்கிறதா? பத்திரிக்கை பரபரப்புக்காக இது போன்ற செய்திகளை தெலுங்கு ஊடகங்கள் வெளியிடுகிறதா? என்ற சந்தேகத்தையும் ரசிகர்கள் கிளப்பி இருக்கிறார்கள்.

மேலும் இந்த விஷயம் ஒரு வேலை உண்மையாகி விட்டால் என்ன செய்வது என்று தெரியாமல் ராஷ்மிகாவின் ரசிகர்கள் அனைவரும் ஆழ்ந்த சோகத்தில் மூழ்கி இருப்பதாக தெரியவந்துள்ளது.

இன்னும் சில ரசிகர்கள் இவர்கள் திருமணம் செய்து கொண்டு சீரும் சிறப்புமாக வாழ வேண்டும் என்று வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் இப்போது இருந்தே தெரிவிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

இந்த தகவல் பற்றி உங்கள் மனதில் என்ன நீங்கள் நினைக்கிறீர்கள். திருமணம் கட்டாயம் நடக்குமா? இல்லை இதுவும் கிசுகிசுக்களின் வரிசையில் நிற்குமா? என்பது வரும் பிப்ரவரி காதலர் தினத்தன்று தெரிந்துவிடும் அல்லவா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version