உறுதியான நடிகை ராஷ்மிகா மந்தனா திருமணம்..! மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்சா ஷாக் அடிக்கும்..!

கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான க்ரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தில் துணை நடிகையாக அறிமுகமான நடிகை ராஷ்மிகா மந்தனா. தன்னுடைய முதல் படத்தின் இயக்குனரையே காதலித்து நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.

ஆனால் தொடர்ந்து தனக்கு பட வாய்ப்புகள் கிடைத்த காரணத்தினாலும் சினிமாவில் நீண்ட தூரம் பயணிக்கலாம் என்று மனம் மாறிய காரணத்தினால் தன்னுடைய நிச்சயதார்த்தத்தை ரத்து செய்துவிட்டு திருமணத்தை நடத்தாமல் நிச்சயம் செய்த இயக்குனருக்கு tata காட்டிவிட்டு வந்துவிட்டார் நடிகை ராஷ்மிகா மந்தனா.

அதனை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு ஒரு நடிப்பில் வெளியான கீதா கோவிந்தம் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு பெற்று கொடுத்தது. இந்தியா முழுவதும் பிரபலமானார். நேஷனல் கிரஷ் என்று ரசிகர்கள் பலரும் இவரை செல்லமாக அழைத்தனர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் என நடித்து வந்த இவர் ஹிந்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான அனிமல் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது திருமணம் செய்து கொள்ள ஆயத்தமாகி வருவதாக நடிகர் ராஷ்மிகா மந்தனா என்று தெரிகிறது. சினிமாவிலிருந்து விலகி திருமண வாழ்க்கையில் ஐக்கியமாக முடிவெடுத்திருக்கிறார் ராஷ்மிகா மந்தனா என்று கூறப்படுகிறது.

அந்த வகையில் நீண்ட நாட்களாக நடிகை ராஷ்மிகா மந்தனாவை காதலித்துக் கொண்டிருக்கிறார் என்ற கிசுகிசுக்கப்பட்ட நடிகர் விஜய் தேவாரகொண்டவை விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்று அக்கட தேசத்து ஊடகங்கள் கிசுகிசுத்து வருகின்றன.

இதன் முதல் கட்டமாக நடிகை ராஷ்மிகா மந்தனா கடந்த மூன்று மாத காலமாக எந்த ஒரு புதிய படத்திலும் ஒப்பந்தமாகவில்லை எனவும் ஏற்கனவே ஒப்பந்தமான படங்களில் மட்டுமே நடித்துக் கொண்டிருக்கிறார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

எனவே விரைவில் திருமண வாழ்க்கைக்குள் ஐக்கியமாக இருக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா என்று கூறுகிறார்கள் விவரம் வந்து வட்டாரங்கள்.

மேலும், ஜாதகம், ஜோதிடம் ஆகியவற்றின் மீது அதிக நம்பிக்கை கொண்டிருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனாவிடம் 2024 ஏப்ரல் மாதத்திற்குள் திருமணம் செய்தால் திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும் என்று அவருடைய குடும்ப ஜோதிடர்கள் கூறியதன் பேரில் இந்த முடிவை எடுத்திருக்கிறார் என கூறப்படுகிறது.

இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version