80’s தமிழ் ஹீரோயின்களின் நிஜ மகள்கள் – பிரமிக்க வைக்கும் தகவல்கள்..!

தமிழ் சினிமாவில் கடந்த 1980களில் நடித்த நடிகைகள் பலர், இப்போதும் சினிமாவில் அம்மா, அக்கா கேரக்டர்களில் நடித்துக்கொண்டுதான் இருக்கின்றனர். ஏனெனில் அவர்களது அப்போதைய சிறப்பு நடிப்பு இப்போதும் அவர்களை பீல்டில் வைத்திருக்கிறது.

அந்த வகையில், அவர்களில் பலருக்கு திருமணமாகி வளர்ந்த மகள்கள் இருக்கின்றனர். அவர்களில் சிலர் பிரபல நடிகைகளாகவும் இருக்கின்றனர். அதுபற்றி தெரிந்துக்கொள்ளலாம்.

கவர்ச்சி நடிகை அனுராதா மகள்தான் அபிநயாஸ்ரீ பிரண்ட்ஸ், ஒன் டூ த்ரி போன்ற சில படங்களில் நடித்திருந்தார். குஷ்பு மகள்கள் அவந்திகா, அனந்திகா இன்னும் நடிக்க துவக்கவில்லை. விரைவில் வருவார்கள் என எதிர்பார்க்கலாம்.

மேனகா மகள் கீர்த்தி சுரேஷ், விஜய் மற்றும் தனுஷ் போன்றவர்களுடன் ஜோடியாக நடித்தவர். அண்ணாத்த படத்தில், ரஜினிகாந்த் தங்கையாக நடித்திருந்தார். கவர்ச்சி நடிகை ஜோதிலட்சுமி மகள், ஜோதி மீனா இவரும் சில படங்களில் கவர்ச்சியாக நடித்திருந்தார்.

நடிகை ரேவதி மகள் மகி. இன்னும் சிறுமியாக இருக்கிறார். ஸ்ரீதேவி மகள்கள் ஜான்வி கபூர், குஷி கபூர் இருவரும் நடிப்பில் ஆர்வமாக இருக்கின்றனர். ஜான்வி கபூர், சூர்யாவுக்கு ஜோடியாக இந்தி படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.

பூர்ணிமா மகள் சரண்யா பாக்யராஜ், இவரும் சில படங்களில் நடித்தார். பெரிய அளவில் வரவேற்பில்லை. அதே போல், ராதிகா மகள் ராயன், இவர் சினிமாவில் ஏதும் நடிக்க ஆர்வம் காட்டவில்லை.

அடுத்து நடிகை ஊர்வசி மகள் தேஜலட்சுமியும் தமிழ் சினிமாவில் நடித்ததாக தெரியவில்லை. அடுத்து கவுதமி மகள் சுப்புலட்சுமியும் சினிமாவில் நடிக்க முன்வரவில்லை. நடிகைகள் மகள்கள் சிலருக்கு நடிப்பில் ஆர்வம் இருப்பதில்லை.

அதே போல் கமல்ஹாசனின் மனைவி சரிகா மகள் ஸ்ருதிஹாசன், அக்சரா ஹாசன் இருவருமே சினிமாவில் நடித்துள்ள்னர். இதில் ஸ்ருதிஹாசன், தெலுங்கில் நிறைய படங்களில் நடிக்கிறார். நதியா மகள்கள் ஜனாப், சனம் தமிழில் இன்னும் நடிக்கவில்லை.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version