இதனால தான் என் தலை மொட்டையாகிடுச்சு.. ரஜினியே கூறிய தகவல்..! – ரசிகர்கள் ஷாக்..!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய தலையிலிருந்த முடிகள் ஏன் உதிர்ந்து விட்டது என்று பல வருடங்களுக்கு முன்பு பேட்டி ஒன்றில் பதிவு செய்திருக்கிறார்.

அந்த பேட்டியை தான் தற்போது இந்த பதிவில் பார்க்க போகிறோம். நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் ராஜாவாக வலம் வந்து கொண்டிருந்த நேரம்.

தற்போதும் ராஜாவாகத்தான் வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆனால் வருடத்திற்கு நான்கு ஐந்து படங்கள் நடித்துக் கொண்டிருந்த நேரம் அது.

நடிகர் ரஜினிகாந்தின் பெயர் தான் திரும்பிய பக்கம் எல்லாம் ஒலித்துக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்திடம் நீங்கள் உங்களுக்கும் கமலஹாசனுக்கும் கிட்டத்தட்ட ஒரே வயது தான்.

ஆனால், கமலஹாசனுக்கு முடி நிறைய இருக்கிறது. ஆனால் உங்கள் முடி அனைத்தும் உதிர்ந்து விட்டதே.. இதற்கு என்ன காரணம்..? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு கொஞ்சம் கூட யோசிக்காத ரஜினிகாந்த்.. உடனடியாக பதில் அளித்தார். அவர் கூறியதாவது, ஆரம்பத்தில் எனக்கும் பம்பை போல முடி இருந்தது உண்மைதான். ஆனால், இளநரைனால் நான் அவதிப்பட்டேன்.

இளம் வயதிலேயே என்னுடைய முடிகள் நறைந்து விட்டது. இதற்காக முடியை கருப்பாக்க வேண்டும் என்பதால் டை அடிக்க ஆரம்பித்தேன். அதில் ஏற்பட்ட அலர்ஜி தான் என்னுடைய முடி அனைத்தும் உதிர்ந்து விட்டது. ஏதோ, இப்போதைக்கு கொஞ்சம் ஓட்டிகிட்டு இருக்கிறது என தன்னுடைய ஸ்டைலில் கூறியிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version