காதல் மனைவிக்கு ரெடின் கிங்ஸ்லி கொடுத்த கிஃப்ட்..! – உறைந்து போன சங்கீதா..!

தமிழ் சினிமாவில் மிகவும் குறுகிய கால கட்டத்தில் தனக்கு என்று அசைக்க முடியாத ஒரு இடத்தை தமிழ் ரசிகர்களின் மத்தியில் பெற்றிருக்கும் பிரபல காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி “கோலமாவு கோகிலா” படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார்.

இதனை அடுத்து “டாக்டர்” திரைப்படத்தில் நடித்து பிரபலமானார். மேலும் இவர் வசனத்தை உச்சரிக்க கூடிய விதம், இவரது உடல் மொழி வித்தியாசமாக இருப்பதின் காரணத்தால் ரசிகர்கள் இவரது காமெடியை ரசித்துப் பார்த்து வருகிறார்கள்.

மேலும் இவரது நடிப்பு தளபதி விஜய் நடித்த “பீஸ்ட்” படத்தில் மிகவும் சிறப்பான முறையில் அமைந்திருந்ததை எவராலும் மறக்க முடியாது. அந்த வகையில் கடந்த சில வாரங்களாக ரெடின் கிங்ஸ்லி பற்றிய செய்திகள் அதிகளவு வலைத்தளங்களில் உலா வருகிறது.

இதற்குக் காரணம் இவர் மாஸ்டர் படத்தில் விஜயின் தோழியாக நடித்த சங்கீதாவை உருகி, உருகி காதலித்து திருமணம் செய்து கொண்டு இருக்கிறார். சங்கீதா சின்னத்திரை சீரியல்களிலும் அதிக அளவு நடித்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தவர். எளிய முறையில் இவர்கள் திருமணம் நடந்தேறியது.

திடீர் என யாரும் எதிர்பார்க்காத சமயத்தில் திருமணம் முடித்துக் கொண்ட இவர்களுக்கு திரை உலக பிரபலங்கள் மட்டுமல்லாமல் குடும்பத்தாரும், நண்பர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.

இந்நிலையில் இந்த புதுமண ஜோடிகள் தேன் நிலவுக்கு சென்ற போது எடுத்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்கள்.

மேலும் கணவரின் பிறந்தநாளுக்கு சங்கீதா இரவு பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்து கொண்டாடிய புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்கள்.

தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தனது காதல் மனைவி சங்கீதாவிற்கு எதிர்பார்க்காத பரிசினை வாங்கி கொடுத்து வெளியே கூட்டி சென்று புகைப்படங்களை எடுத்து அதையும் இன்ஸ்டாவில் பகிர்ந்து இருக்கிறார்கள்.

இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படுகின்ற புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது. மேலும் ரசிகர்கள் அனைவரும் இவர்களது புகைப்படத்தை பார்த்து விதவிதமான கமெண்ட்களை கொடுத்திருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version