என்னது.. தமிழ் பொண்ணுன்னா டிஸிப்ளீன் வேணும்.. அது எங்கமா என கேட்டு சங்கீதாவை பங்கம் பண்ணும் ரசிகர்கள்..!

தமிழ் பெண்ணா இருந்துட்டு இப்படிப்பட்ட செயலை செய்யலாமா? என்று சீரியல் நடிகை சங்கீதாவை பங்கமாக ரசிகர்கள் அனைவரும் கலாய்த்து தள்ளி இருக்கிறார்கள். இதற்கு என்ன காரணம் என்று தெரிந்தால் நீங்களும் கண்டிப்பாக அவர் செய்தது தவறு என்பதை கூறுவீர்கள்.

இவர் சமீபத்தில் தான் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் தற்போது பேமஸான காமெடி நடிகராக மாறி இருக்கும் ரெடின் கிங்ஸ்ஸியை, டிசம்பர் மாதம் 10-ஆம் தேதி காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவரது கல்யாணமும் ரசிகர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றிருந்தாலும், திடீர் என திருமணம் செய்து கொண்டதால் குறைந்த அளவு நண்பர்களும், திரை பிரபலங்களுமே இவர்களது திருமணத்தில் கலந்து கொண்டார்கள்.

திருமணத்தை அடுத்து இவர் கணவரின் பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடி க்யூட்டாக எடுத்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் மத்தியில் பாராட்டுகளை பெற்று விட்டார்.

குறிப்பாக ரொமான்டிக் போட்டோக்களை தொடர்ந்து பார்த்து ரசிகர்கள் பொறாமை கொள்ளும் அளவிற்கு மிக நேர்த்தியாக அவர்களது ரொமான்ஸ் இருந்ததாக வர்ணித்திருந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

திருமணத்திற்கு பிறகு சங்கீதாவின் கவர்ச்சி மேலும் அதிகரித்து உள்ளது என்று தான் கூற வேண்டும். இந்த நிலையில் தற்போது இவர் தாலியை கழட்டி வைத்துவிட்டு மாடர்ன் உடையில் புகைப்படங்களை எடுத்து இருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்து பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.

அந்த வகையில் சிலர் தமிழ் பெண்கள் இப்படி தாலியை கழட்டி வைப்பது முறையா? இது உங்களுக்குத் தெரியாதா? என்பது போன்ற விதத்தில் கேள்வியை எழுப்பி சங்கீதாவை நக்கலாக கிண்டலடித்து இருக்கிறார்கள்.

இன்னும் சில ரசிகர்கள் அவருக்கு அட்வைஸ் செய்வது போல “தமிழ் பொண்ணுன்னா டிஸிப்ளீன் வேணும்..” என்ற வார்த்தைகளை போட்டு கலாய்த்து இருக்கிறார்கள். இப்போது சொல்லுங்கள் சங்கீதா செய்தது தவறா? இல்லையா? என்று.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version