என்னது…? – ரெடின் கிங்ஸ்லி , சங்கீதா திடீர் திருமணம்…! – அதிர வைக்கும் காரணம்..! – ஷாக் ஆன ரசிகர்கள்..!

பிரபல காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி மற்றும் நடிகை சங்கீதா ஆகியோருடைய திடீர் திருமணம் ரசிகர்களை ஒரு நிமிடம் ஜெர்க் ஆக்கி இருக்கிறது என்று தான் கூற வேண்டும்.

என்னது..? படப்பிடிப்பு தளத்தில் திருமணமா..? ஒருவேளை ஏதாவது படத்தில் இடம் பெற்ற காட்சியாக இருக்கும்.. இது சூட்டிங்காக இருக்கும் என்று ரசிகர்கள் பலரும் கடந்து சென்று கொண்டிருந்தார்கள்.

ஆனால், ஊடகங்களில் இவர்கள் திருமணம் பற்றிய செய்தி வெளியான பிறகுதான் ரசிகர்கள் இருவரும் நிஜமாகவே திருமணம் செய்து கொண்டார்களா..? என்று வியந்து வருகிறார்கள். மறுபக்கம் அவர்களுக்கு தங்களுடைய வாழ்த்துக்களையும் இணைய பக்கங்களில் பரவலாக பதிவு செய்து வருகின்றனர்.

பல்வேறு திரைப்படங்களில் முன்னணி கதாநாயகர்களுக்கு காமெடி ஹீரோவாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் ரெடின் கிங்ஸ்லி இவர் நடிகர் என்பதை தாண்டி ஒரு தொழிலதிபர் என்பது பலருக்கும் தெரியாத ஒரு விஷயம்.

அரசு சார்ந்த பொருட்காட்சி மற்றும் கண்காட்சி ஆகியவற்றை எடுத்து நிர்வாகம் செய்யக்கூடிய தொழிலை செய்து கொண்டிருக்கிறார். பல்வேறு விதமான கலை சார்ந்த தொழில்களை செய்து வருகிறார். அந்த பழக்கத்தின் அடிப்படையில் தான் இயக்குனர் நெல்சன்ரெடின் கிங்ஸ்லி-க்கு பட வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.

இவர் முதலில் நடிகராக அறிமுகமான திரைப்படம் நடிகர் சிம்புவின் வேட்டை மன்னன். இந்த திரைப்படம் படப்பிடிப்பு ஆரம்பமாகி இரண்டு வாரங்களில் நின்று போனது. இதற்கு என்ன காரணம்..? என்று இதுவரை தெரியவில்லை.

அந்த படத்தின் மீது ரசிகர்களுக்கும் மிகுந்து எதிர்பார்ப்பு இருந்தது. இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக இருந்தார் இயக்குனர் நெல்சன். ஆனால், இந்த திரைப்படம் ட்ராப் ஆனது.

அதன் பிறகு கோலமாவு கோகிலா திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமானார் நெல்சன். நெல்சன் படங்களில் அனைத்துமே ரெடின் கிங்ஸ்லி காமெடி கதாபாத்திரத்தில் தோன்றியிருக்கிறார்.

இந்நிலையில் சீரியல் நடிகை சங்கீதாவை திடீரென திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இதுக்கு என்ன காரணம் என்று தகவல் வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆகியிருக்கிறது என்று தான் கூற வேண்டும்.

என்னவென்றால் நடிகர் ரெடின் கிங்ஸ்லி மற்றும் நடிகை சங்கீதா இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருகிறார்கள் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில் மைசூருவில் படப்பிடிப்பு தளத்தில் இருந்த ரெடின் கிங்ஸ்லி-யை சந்தித்த சங்கீதா எத்தனை நாட்கள் திருமணத்தை தள்ளி போட்டு போவீர்கள்..? திருமணம் செய்து ஆக வேண்டும் என்று திடீரென கேட்டிருக்கிறார். என்ன செய்வது..? என்று தெரியாமல் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார் ரெடின் கிங்ஸ்லி.

உடனே திருமணமும் அரங்கேறி இருக்கிறது. எந்த ஒரு முன்னேற்பாடும் இல்லாமல் திடீரென தான் இந்த திருமணத்தை அவசர அவசரமாக ஒருங்கிணைத்து செய்திருக்கிறார்கள். அவசர அவசரமாக திருமணம் செய்து கொள்வதற்கு என்ன காரணமாக இருக்கும் என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

ஒரு வேலை முன்கூட்டியே அறிவித்திருந்தால்.. திரைப்பிரபலங்கள் அனைவரையும் அழைக்க வேண்டும்.. அதற்கான திருமண செலவு அதிகமாகும்.. என்பதால் திடீரென திருமணம் செய்து இருக்கலாம்.. அதுவும் சரி தான்.. என்று ரசிகர்கள் கருத்துக்களை செய்து தெரிவித்திருக்கின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version