இரண்டாம் திருமணம் செய்து கொண்ட ஆர்.ஜே.பாலாஜி..! முதல் மனைவி யாருன்னு பாருங்க..!

திரைப்படங்களில் நடிக்கின்ற நடிகைகள் மற்றும் நடிகர்கள் திருமணத்தைப் பொறுத்த வரை எந்த விதமான கட்டுப்பாடும் இல்லாமல் சர்வ சாதாரணமாக அடுத்தடுத்து திருமணங்களை செய்து கொள்கிறார்கள். அந்த வகையில் ஆர்.ஜே-வான பாலாஜியும் இரண்டாவது திருமணம் செய்து கொண்டாரா? உண்மை என்ன?

அப்படி இரண்டாவது திருமணம் செய்து கொண்ட ஆர்.ஜே பாலாஜியின் முதல் மனைவி யார்? என்பது பற்றிய விவரங்களை விரிவாக இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

ஓடிப்போய் கல்யாணம்..

ஆர் ஜே பாலாஜியின் இயற்பெயர் பாலாஜி பட்டுராஜ் என்பதுதான். சென்னையில் சேர்ந்த இவர் வானொலி ஒலிபரப்பாளராக விளங்கினார். இதனை அடுத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க கூடிய தொகுப்பாளராக விளங்கிய இவர் சில படங்களில் நடித்தும் இருக்கிறார்.

அந்த வகையில் தற்போது ஆர்.ஜே பாலாஜி தமிழ் திரை உலகில் தவிர்க்க முடியாத ஒரு இடத்தை தனக்கு என்று தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். தமிழ் சினிமாவில் கொண்டிருந்த காதல் காரணத்தால் கொஞ்சம், கொஞ்சமாக சின்ன, சின்ன வேடங்களில் நடிக்க ஆரம்பித்த இவர் எல் கே ஜி என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக வலம் வர ஆரம்பித்தார்.

இந்தப் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை தந்ததை அடுத்து நயன்தாரா நடிப்பில் உருவான மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தனக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரத்தை அமைத்துக் கொண்டார்.

தற்போது இவர் நடிப்பில் வெளி வந்த சிங்கப்பூர் சலூன் என்ற படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை இவருக்கு பெற்றுத் தந்துள்ளது.

இந்நிலையில் ஆர்.ஜே பாலாஜி பட ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் பேசும் போது இவருக்கு 21 வயது இருக்கும் போதே ஓடிப்போய் கல்யாணம் செய்து கொண்டேன் என்று கூறியிருக்கிறார். அப்போது அவர் ஆர்.ஜேவாக பணியாற்றவில்லை என்றும் ஆனால் அதற்கான கால் லெட்டர் மட்டும் இருந்ததாக கூறினார்.

நல்ல நாள் பார்த்து மீண்டும் கல்யாணம்..

அப்படி அவர் ஓடிப்போய் திருமணம் செய்து கொண்ட முதல் மனைவி மற்றும் இரண்டாம் மனைவி எல்லாம் அவருக்கு ஒருவர் தான் என தனது மனைவி குறித்து மிகவும் நெகிழ்ச்சியான முறையில் பேசி இருந்தார்.

அத்தோடு அவர்கள் ஓடிப் போய் திருமணம் செய்து கொண்டதால் நேரம், காலம் என எதையும் பார்த்திருக்க மாட்டார்கள் என்ற நிலையில் ஒரு நல்ல நாள் பார்த்து வீட்டில் இருக்கும் நபர்கள் திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள் என்று கூறியது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

அத்தோடு இவர் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளவில்லை. அவருக்கு எல்லாமே அவரது மனைவிதான் என்பதை சூசகமாக ரசிகர்கள் முன் தெரிவித்ததை அடுத்து இவர் மனைவி மீது எந்த அளவு காதலோடு இருக்கிறார் என்பது அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

இதனை அடுத்து ரசிகர்கள் ஏதேதோ எண்ணியிருந்த வேளையில் கடைசியில் எனக்கு முதல் மனைவியும், இரண்டாவது மனைவியும் எல்லாம் ஒரே மனைவி தான் என்று ஆர்.ஜே பாலாஜி எனக்கே உரிய பாணியில் சொன்னது ரசிகர்களின் மனதில் சந்தோஷத்தை வரவழைத்துள்ளது.

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இந்த விஷயத்தை அவர்கள் நண்பர்களோடு ஷேர் செய்து வருவதோடு ராமருக்கு எப்படி ஒரு வில், ஒரு சொல் என்று இருக்கிறாரோ அது போலத் தான் ஆர்.ஜே பாலாஜியும் என்று பங்கமாக கலாய்த்து வருகிறார்கள்.

மேலும் இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version