Sai Pallavi : லவ்வரை அறிமுகம் செய்த சாய்பல்லவியின் சகோதரி..! அக்காவுக்கு தெரியுமா..?

முன்பெல்லாம் தனக்கு பிடித்தவரை, தான் விரும்பும் ஒருவரை பெற்றோரிடம் நேரில் கூட்டிவந்து அறிமுகப்படுத்துவார்கள். அல்லது அவரது புகைப்படத்தை பெண்கள் காட்டுவார்கள். அதுதான் வழக்கமாக இருந்தது.

இப்போது தனது மகள் விரும்பும் காதலனை, தங்களது வருங்கால மருமகனை இன்ஸ்டாகிராம் அல்லது டிவிட்டரில் பார்த்துதான் தெரிந்துக்கொள்ள வேண்டும் போலிருக்கிறது.

கடந்த 2015ம் ஆண்டில் வெளியான பிரேமம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சாய் பல்லவி. படம் செம ஹிட் ஆனதால் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல படங்களில் நடித்து வரும் முன்னணி நடிகையாக சாய்பல்லவி மாறிவிட்டார்.

தமிழில் தனுஷ் உடன் மாரி 2, சூர்யாவுடன் என்ஜிகே உள்ளிட்ட படங்களில் நடித்த அவர், இப்போது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

சாய்பல்லவியின் சகோதரி பூஜா கண்ணன். இவர் அச்சு அசலாக பார்ப்பதற்கு சாய்பல்லவி போன்றே தோற்றமளிக்கிறார். ஸ்டண்ட் சில்வா இயக்கிய சித்திரை செவ்வானம் என்ற படத்தில் நடித்திருந்தார்.

கடந்த 2021ம் ஆண்டில் வெளியான இந்த படத்தில் ஹீரோ சமுத்திரக்கனி. ஆனால் இந்த ஒரு படத்துக்கு பிறகு பூஜா கண்ணன் நடிக்கவில்லை.

சோஷியல் மீடியாவில் ஆக்டிவ் ஆக இருக்கும் பூஜா கண்ணன், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பரபரப்பான பதிவை செய்திருக்கிறார். இவர்தான் வினீத், இவரை நான் காதலிக்கிறேன் என, தனது காதலருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

இது உங்கள் அக்கா சாய்பல்லவிக்கு தெரியுமா, அவங்க என்ன சொன்னாங்க என கேள்விகளுடன் பலரும் தங்களது கமெண்டுகளை, வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version