தினமும் குடிச்சுட்டு வந்து.. போதையில் என்னிடம்.. ஷகீலா மீது வளர்ப்பு மகள் குலைநடுங்க வைக்கும் புகார்..!

தமிழ் மற்றும் மலையாள படங்களில் செக்ஸ் காட்சிகளில் அதிகளவில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஷகிலா.

கடந்த 1990களில் முன்னணி ஹீரோக்களின் படங்களை விட ஷகிலா நடித்த படங்களை பார்க்க தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதும்.

ஷகிலா திருமணம் செய்துக்கொள்ளவில்லை. அதனால் 6 மாத கைக் குழந்தையாக இருந்த தனது அண்ணன் மகள் ஷீத்தல் என்பவரை வளர்ப்பு மகளாக வளர்த்தார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன், தனது வளர்ப்பு மகள் தன்னை தாக்கி விட்டதாகவும், தடுக்க வந்த தனது வக்கீல் சவுந்தா்யாவை ஷீத்தல், அவரது சொந்த தாய் மற்றும் ஷீத்தலின் அக்கா ஆகியோர் தாக்கியதாகவும் மாம்பலம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஷீத்தல் கூறியதாவது,

ஷகிலா அத்தை எப்போது பார்த்தாலும் என் அம்மா, அக்காவை பற்றி மிக தரக்குறைவாக பேசுவார். நான் சின்னப்பெண் என்பதால் அதை பற்றி அவரிடம் கேட்க முடியவில்லை.

இப்போதும் அப்படியே பேசிக்கொண்டு இருந்ததால், நான் கோபித்துக்கொண்டு என் அம்மா வீட்டுக்கு போய்விட்டேன். மீண்டும் என்னை போன் பண்ணி வீட்டுக்கு வருமாறு அழைத்ததால், இத்தனை நாள் நான் வளர்ந்து, வாழ்ந்த வீடு என்று திரும்பவும் வந்தேன்.

அப்போது சமாதானம் பேசுவதாக என் அம்மா, அக்கா ஆகியோரையும் வீட்டுக்கு வரச்சொன்ன ஷகிலா, வக்கீல் சவுந்தர்யா எங்களை தரக்குறைவாக பேசி தாக்கினர். அதனால் நாங்களும் திருப்பித் தாக்கினோம்.

ஷகிலாவுக்கு குடிக்கும் பழக்கம் உண்டு. தினமும் இரவில் குடிப்பார். தினமும் இரவில் குடித்துவிட்டு போதையில் வந்து என்னை அசிங்க அசிங்கமாக திட்டுவார். பல நேரங்களில் அவர் என்னை அடித்தும் இருக்கிறார், என்று கூறியிருக்கிறார் ஷகிலாவின் வளர்ப்பு மகள் ஷீத்தல்.

தனது மகளை தவறான பாதையில் செல்ல தூண்டுகிறார் என ஷகிலா மீது ஷீத்தலின் தாயாரும், என் சொத்துகளை அபகரிக்க பார்க்கின்றனர் என ஷீத்தல் குடும்பத்தினர் மீது ஷகிலாவும் புகார் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version