நோ மோர் சிங்கிள்.. இரண்டாம் திருமணம் செய்யும் சமந்தா..! மாப்பிள்ளை யார் தெரியுமா..?

தமிழில் பல வெற்றிப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் சமந்தா. அவரது இளமையும், அழகும் தமிழ் சினிமா ரசிகர்களை மிகவும் வசீகரித்த நிலையில், அவரது படங்களுக்கு அவர்கள் மத்தியில் தனி வரவேற்பு உள்ளது.

கத்தி, தெறி, சீமராஜா, தங்கமகன், நான் ஈ, காத்து வாக்குல ரெண்டு காதல், குஷி, சாகுந்தலம், யசோதா, ஓ பேபி, இரும்புத்திரை, மெர்சல், 10 எண்றதுக்குள்ள, அஞ்சான், யு டர்ன், 24 என பல படங்களில் நடித்திருக்கிறார்.

சமந்தா காதல்

தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் பல படங்களில் நடித்த சமந்தா, தெலுங்கு நடிகர் நாக சைதன்யா காதலித்து, 2017ம் ஆண்டில் திருமணம் செய்துக்கொண்டார். கோவாவில் அவர்கள் திருமணம் நடந்தது.

ஆனால் திருமணமான நான்கே ஆண்டுகளில் அவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். பிரபல ஸ்டார் தம்பதி நாகார்ஜூனா – அமலா தம்பதியின் மகன்தான் நாக சைதன்யா என்பது குறிப்பிடத்தக்கது.

திருமண வாழ்வில் ஏமாற்றம் ஏற்பட்டாலும், தனது சினிமா பயணத்தில் மீண்டும் அதிக கவனம் செலுத்த துவங்கினார் சமந்தா.

புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஊ சொல்றியா மாமா பாடல் காட்சியில் அல்லு அர்ஜூனுடன் மிக செக்ஸியாக நடித்து, மிக பிரபலமானார் சமந்தா.

மையோசிடிஸ் பாதிப்பு

இந்த சூழலில் திடீரென அவருக்கு மையோசிடிஸ் என்ற தோல் அலர்ஜி நோய் ஏற்பட்டது. இதனால் அவர் கடுமையான உடல்நல பாதிப்புகளை சந்தித்தார். படப்பிடிப்பில் பங்கேற்க முடியாமல் மாதக்கணக்கில் மருத்துவ சிகிச்சைகளை பெற்றார்.

பல வெளிநாடுகளுக்குச் சென்று சிகிச்சை பெற்றார். வீட்டில் இருந்தும் மாதக்கணக்கில் சிகிச்சை பெற்றார்.

எனினும் இப்போது சிட்டாடல் என்ற வெப் சீரிஸ் படப்பிடிப்பில் கலந்துக்கொண்டு நடித்து வருகிறார்.

இரண்டாம் திருமணம்

இந்நிலையில் அவர் இனிமேல் திருமணமே வேண்டாம். சிங்கிளாக வாழ்ந்து விடுகிறேன் என்று கூறிவந்த நிலையில், அவரது வீட்டில் இரண்டாம் திருமணம் குறித்த அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

சமந்தா தனிமையில் இருப்பதை விரும்பாத அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவருக்கு இரண்டாம் திருமணம் செய்ய முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தங்களது குடும்பத்தை சேர்ந்த நெருங்கிய உறவினர் பையன் ஒருவரை, சமந்தாவுக்கு திருமணம் செய்து வைக்கும் முயற்சிகள் துரிதமாக நடந்து வருகிறது. விரைவில் சமந்தாவின் இரண்டாவது திருமணம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு, மாப்பிள்ளை யார் என்கிற விவரமும் வெளியாக வாய்ப்புள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version