வாய்ப்பு கிடைக்காத ஒரே ரத்தங்கள்..! வியக்க வைக்கும் பட்டியல்..!

திரை உலகில் திறமை மட்டுமல்ல, அதிர்ஷ்டமும் இருந்தால் மட்டும் தான் ஜொலிக்க முடியும் என்பதற்கான உதாரணங்களை இந்த பதிவில் நாம் படித்து தெரிந்து கொள்ளலாம். ஒரே தாயின் வயிற்றில் பிறந்த ஒரே ரத்தங்கள் இவற்றில் ஒருவர் மட்டுமே ஜொலிக்க மற்றொருவர் வாய்ப்பு கிடைக்காமல் தவிக்க கூடிய நிலை இன்று வரை தொடர் கதையாக உள்ளது.

அப்படி திரை உலகைச் சார்ந்த ஒரே ரத்தங்களில் ஜொலித்தவர்கள் யார்? வாய்ப்பை கோட்டை விட்டவர்கள் யார்? யார்? என்பதைப் பற்றி இனி பார்க்கலாம். தமிழ் திரை உலகில் இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக நடிகர் ஜீவா விளங்குகிறார். எனினும் இவரது சகோதரர் ஜித்தன் ரமேஷ் நடித்த ஜித்தன் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கிறார்.

இவரைப் போலவே சிறுத்தை சிவா ஒரு மிகச்சிறந்த இயக்குனராக மாறினார். எனினும் இவரது தம்பி பாலா சிறந்த நடிகராக ஜொலிக்க முடியவில்லை. மேலும் ஏ.எல் விஜய் ஒரு சிறப்பான இயக்குனர் என்ற அந்தஸ்தை பெற்ற போதும், சில படங்களில் நடித்த நடிகர் உதயா அவருக்கு உரிய இடத்தை சினிமாவில் பிடிக்க முடியவில்லை.

பாரதிராஜா திரையுலகில் நீண்ட நாட்களாக நிலைத்திருக்கிறார். அவரது மகன் மனோஜ் பாரதிராஜாவிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. பி வாசு இயக்குனராக நிலைத்திருக்க அவரது மகன் சக்தி அவர்களுக்கு சரியான வாய்ப்பு இன்னும் கிடைக்கவில்லை.

அதுபோலவே பாண்டியராஜன் என்றும் நடித்துக் கொண்டிருக்கிறார் ஆனால் அவர் மகன் பிரிதிவிராஜனுக்கு எந்த ஒரு வாய்ப்பும் சரியாக அமையவில்லை. நடிகர் ஆர்யா தனக்கு என்று ஒரு நிரந்தரமான இடத்தை திரை உலகில் பிடித்துக் கொண்டார். எனினும் இவரது தம்பி சத்யா தனக்கு என்று ஒரு இடத்தை திரை உலகில் அமைத்துக் கொள்ள முடியவில்லை.

லிட்டில் சூப்பர் ஸ்டாராக நடிகர் சிம்பு திகழ்கிறார். ஆனால் அவரது தம்பி குறளரசன் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். கங்கை அமரன் மகன் வெங்கட் பிரபு ஒரு இயக்குனராக ஜெயித்து விட்டார். எனினும் இவரது தம்பி பிரேம்ஜி வெட்டியாக தான் இன்னும் இருக்கிறார்.

கட்டப்பனாக கலக்கிய சத்யராஜ் தமிழ் திரை உலகில் தனக்கு என்ற ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்துக் கொண்டிருக்கிறார். எனினும் இவரது மகன் சிபிராஜுக்கு சிறந்த படங்கள் ஏதும் அமையவில்லை.

இயக்குனர் விஷ்ணுவர்தன் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டு இருந்தாலும் இவரது சகோதரர் கிருஷ்ணா ஓரிரு படங்களில் நடித்து சரியான இடத்தை அடைய முடியாமல் இன்னும் தவித்துக் கொண்டிருக்கிறார்.

பாக்யராஜ் என்றுமே தமிழ் திரையுலகம் உள்ளவரை பேசக்கூடிய இயக்குனராகவும் நடிகராகவும் பன்முக திறமை கொண்ட நபராகவும் இருக்கிறார். எனினும் இவரது மகன் சாந்துனுவுக்கு சரியான வாய்ப்புகள் ஏதும் கிடைக்கவில்லை.

திரையுலகில் கேப்டன் என்று அழைக்கப்படும் விஜயகாந்துக்கு கிடைத்த இடம் அவரது மகன் சண்முக பாண்டியன் கிடைக்கவில்லை என்பது கவலையான விஷயம் தான். டான்ஸ் மாஸ்டரான ராகவா லாரன்ஸ் மெல்ல, மெல்ல முன்னேறி இன்று நடிகர் என்ற அசைக்க முடியாத அந்தஸ்தை பெற்றிருக்கிறார். எனினும் இவரது தம்பி எல்வினுக்கு சிறப்பான வாய்ப்புகள் ஏதும் கிடைக்கவில்லை.

மிகச்சிறந்த குணச்சித்திர நடிகர் ஆன தம்பி ராமையா திரையுலகில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டாலும், அவரது மகன் உமாபதி ராமையாவிற்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பிரபுதேவா இன்றளவும் நடித்துக் கொண்டிருக்கிறார் அவரது தம்பி நாகேந்திர பிரசாத் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார்.

ஹீரோயினிகளை பொறுத்த வரை பானுப்பிரியா தனக்கு தென்னிந்திய சினிமாவில் பெற்றிருக்கிறார். எனினும் இவரது தங்கை சாந்திப்பிரியா ஒரு படத்தில் நடந்து பின் நிலைக்கவில்லை. அவர் நடித்தது எங்க ஊரு பாட்டுக்காரன் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை கனகா முன்னணி ஹீரோயினாக நிலைத்திருந்தார். அவர் தங்கை சரத் பிரீத்தா சின்ன பசங்க நாங்க என்ற திரைப்படத்தில் நடித்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம். காதல் கோட்டை தேவயானி இன்றளவும் நடித்துக் கொண்டிருக்கிறார். அவரது தம்பி நகுலுக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை.

காஜல் அகர்வால் ஒரு மிகச்சிறந்த நடிகையாக தமிழில் மாறிவிட்டார். ஆனால் இவரது தங்கையான நிஷா அகர்வாலுக்கு எந்த ஒரு வாய்ப்பும் இன்று வரை கிடைக்கவில்லை. அருண் விஜய் தற்போது படங்களில் தனித்துவமாக நடித்து வருகிறார். எனினும் இவரது தங்கை ஸ்ரீதேவி விஜயகுமாருக்கு சினிமாவில் நடிப்பதற்கான சிறந்த வாய்ப்புகள் ஏதும் கிடைக்கவில்லை.

உலக நாயகன் கமலஹாசனின் மூத்த மகள் சுருதிஹாசனுக்கு கிடைத்த வாய்ப்பு அவரது தங்கை அக்ஷரா ஹாசனுக்கு கிடைக்கவில்லை. அதுபோலவே அன்று முதல் இன்று வரை எவர்கீரீன்களின் நடிகையாக ராதிகா நடித்துக் கொண்டிருந்தாலும் அவரது தங்கை நிரோஷாவிற்கு சரியான பட வாய்ப்புகள் ஏதும் இல்லை.

அதுபோலவே ஷாலினிக்கு கிடைத்த வாய்ப்புகள் சாமிலிக்கு கிடைத்ததா? என்றால் அது கேள்விக்குறியாக தான் இருக்கும். ஆக்சன் கிங் அர்ஜுன் அவருக்கு என்று ஒரு தனி இடத்தை திரையுலகில் பிடித்திருந்தாலும், அவரது மகள் ஐஸ்வர்யா அர்ஜுனுக்கு சரியான பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version