வாத்தி ஹீரோயின் திருமணம் – மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

அடியாத்தி இது என்ன பிலு.. என்று தமிழக இளைஞர்கள் முழுவதையும் ஒருவிதமான பீலிங்கில் தள்ளிவிட்ட வாத்தி பட ஹீரோயின் சம்யுக்தா மேனன் மலையாள திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர்.

இவர் நடிப்பில் வெளி வந்த பாப்கார்ன் திரைப்படம் மலையாள திரை உலகில் மிக நல்ல வசூலை பெற்று தந்தது இதனை அடுத்து 2018 ஆம் ஆண்டு வெளிவந்த தீவண்டி திரைப்படத்தில் இவர் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது.

இதை அடுத்து அதே ஆண்டில் தமிழில் களரி என்ற திரைப்படத்தில் நடித்து பெருவாரியான ரசிகர்களின் ஆதரவை பெற்றார். இதனை அடுத்து எதிர்பார்த்த பட வாய்ப்புகள் தமிழில் அமையாத காரணத்தால் அக்கட தேசத்திற்கு சென்று அங்கு நடித்து வருகிறார்.

தெலுங்கில் ராசியான நடிகை என்ற பெயரை பெற்று விட்ட இவர் பீமா நாயக் என்ற தெலுங்கு படத்தில் நடித்ததின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார். இதனை அடுத்து இவர் தமிழில் தனுஷோடு இணைந்து வாத்தி படத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துவிட்டார்.

இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி தந்ததை அடுத்து பல பட வாய்ப்புகளைப் பெற்ற இவர் தனது ரசிகர் வட்டாரத்தையும் அதிகரித்துக் கொண்டார். மேலும் பல படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு தற்போது அதிர்ச்சியான தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

அது சம்யுத்தா மேனன் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். அதுவும் தான் நீண்ட காலமாக காதலித்து வந்த ஒருவரை தான் இவர் திருமணம் செய்ய இருக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளிவரும் என்று நம்பக்கூடிய வட்டாரங்களில் இருந்து செய்திகள் வந்துள்ளது.

இதனை அடுத்து கடும் அதிர்ச்சியில் இருக்கும் ரசிகர்கள் ஒரு வழியாக மனதை தேற்றிக் கொண்டு இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version