தொகுப்பாளினியிடம் கோபப்பட்ட சம்யுக்தா மேனன்..! எனக்கு இதெல்லாம் பிடிக்காது…!

சம்யுக்தா மிக அழகான கேரளத்து நடிகை. மலையாளத்தில் நிறைய படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் களரி என்ற ஒரு படத்தில் மட்டும் நடித்திருக்கிறார்.

கடந்த 2016ம் ஆண்டில், மலையாளத்தில் பாப்கார்ன் என்ற படம் மூலம் சம்யுக்தா மேனன் அறிமுகமானார்.

அடுத்து 2018ம் ஆண்டில் தீவண்டி, லில்லி ஆகிய படங்களில் நடித்தார். பாலக்காடு சொந்த :ஊராக இருந்தாலும், இப்போது வசிப்பது கொச்சின்தான்.

சமீபத்தில் தனுஷ் நடித்த வாத்தி படம் இவர்தான் கதாநாயகி என்பது குறிப்பிடத்தக்கது. வாத்தி படத்தில் அவரை தமிழ் ரசிகர்கள் வரவேற்றனர்.

சம்யுக்தா மேனன்..

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட வாத்தி பட ஹீரோயின் சம்யுக்தா மேனனிடம் தமிழ் சினிமாவில் எந்த நடிகருடன் நடிக்க வேண்டும் என்றால் எந்த நடிகரை கூறுவீர்கள் என்ற கேள்வியை எழுப்பினார் தொகுப்பாளனி.

இதற்கு பதில் அளித்த சம்யுக்தா மேனன் இப்படியான கேள்விகள் எல்லாம் கேட்கவே கூடாது.

எந்த நடிகையிடமும் இப்படி ஒரு கேள்வியை கேட்காதீர்கள். இதெல்லாம் எனக்கு பிடிக்காது.

இதெல்லாம் எனக்கு பிடிக்காது..

ஏனென்றால் இது அவர்களுடைய எதிர்காலத்திற்கே பெரிய சிக்கலாக அமைந்து விடும். இந்த நடிகர்களுடன் தான் நடிப்பேன், இந்த நடிகருடன் நடிக்க மாட்டேன் என்றெல்லாம் எதுவும் கிடையாது.

நான் நடிகையாக எனக்கு கதை பிடித்திருந்தால் எனக்கு சரியான தோன்றினால் அந்த படத்தில் நான் நடிக்க போகிறேன்.

இந்த ஹீரோவுடன் நடிப்பேன். இந்த ஹீரோவுடன் நடிக்க மாட்டேன் என்று எந்த ஒரு ஆசையும் எதிர்பார்ப்போ என்னிடம் இல்லை என, கோபமாகவே கூறியிருக்கிறார் நடிகை சம்யுக்தா மேனன்

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version