நான் குனிஞ்சதை பாத்துட்டு சந்தானம் சொன்ன வார்த்தை..! – ஓப்பனாக கூறிய நடிகை ஷகீலா..!

நடிகை ஷகீலா, கடந்த 1990களில் கவர்ச்சி நடிகையாக வலம்வந்து ரசிகர்களின் இரவு நேர தூக்கத்தை கெடுத்தவர். முதல் படத்திலேயே சில்க் ஸ்மிதாவின் தங்கையாக நடித்து, ரசிகர்களின் மத்தியில் கவனம் ஈர்த்தவர்.

ஆரம்ப கட்டத்தில், தமிழ் சினிமாவில் பல படங்களில் ஷகீலா நடித்திருக்கிறார். கவுண்டமணி, செந்தில், வெண்ணிற ஆடை மூர்த்தி, ஜனகராஜ் போன்றவர்களுக்கு ஜோடியாக ஷகீலா நடித்திருக்கிறார்.

குறிப்பாக ஒரு படத்தில், ஷகீலா கவுண்டமணிக்கு ஜோடியாக நடித்திருப்பார். என்னது வயசுக்கு வரலையா, என்ற கவுண்டமணியின் பேமஸ் டயலாக், ஷகீலாவை பார்த்து பேசியதுதான்.

ஷகீலாவின் கட்டுக்குலையாத உடற்கட்டும், கவர்ச்சியான முகமும், தூக்கலான முன்னழகும், பின்னழகும் ஒரு கட்டத்தில் அவரை சில்க் ஸ்மிதாவுக்கு அடுத்த நடிகையாக மாற்றியது.

இதை நன்றாக பயன்படுத்திக்கொண்ட ஷகீலா ஏகப்பட்ட கவர்ச்சி படங்களில் நடித்தார். 1990களில் தமிழ், மலையாளம், தெலுங்கு என கவர்ச்சி படங்களில் நடித்தார்.

தியேட்டர்களில் ஷகீலா நடித்த படங்களை காண ரசிகர்கள் கூட்டம் திரண்டதால், வசூல் மழை கொட்டியது.

ஷகீலா

இப்போது ஷகீலா, அதிகமாக கவர்ச்சி படங்களில் நடிப்பதில்லை. காமெடி கலந்த ரோலில் மட்டுமே வந்து செல்கிறார்.

தனக்கு சொந்தமான யூடியூப் சேனலில் பிரபலங்களை அழைத்து நேர்காணல் நடத்தி வருகிறார்.

சமீபத்தில், நடிகை ஜோதி மீனாவை சந்தித்து இருவரும் தங்களது சினிமா பயண அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டனர். அப்போது ஜோதிமீனாவும் கவர்ச்சியாக நடித்துக்கொண்டு இருந்தார்.

அப்போது விஜய் நடித்த அழகிய தமிழ் மகன் படத்தில் நடித்த அனுபவத்தை ஷகீலா, பகிர்ந்துக்கொண்டார். அப்போது ஷகீலா கூறியதாவது.

அழகிய தமிழ் மகன் படத்தில் நடித்த போது, விஜயுடன் எனக்கு ஒன்றாக நடிக்கும் காம்பினேசன் வேண்டாம் என்றேன். ஏனெனில் அவருடன் நடித்த பல வருஷமாச்சு.

அவர் யாரிடமும் பேச மாட்டார் என்றனர். அதனால் பேசாத அவருடன் நடிக்க எனக்கு சங்கடமாக இருக்கும் என்பதால், காம்பினேசன் சீன் வேண்டாம் என்றேன்.

அப்படிப்பட்ட காம்பினேசன் சீன் இல்லை என்று சொல்லிவிட்டு முதல் ஷாட்லயே விஜயுடன் நடிக்க வைத்து விட்டனர்.

நாங்கள் நடித்த அந்த காட்சியில் சந்தானம் வந்து என்ன சொல்லணும் அப்படீன்னா, ‘திருவண்ணாமலையில ஜோதி எரியறதோ இல்லையோ, ஜோதி தியேட்டர்ல உங்க படம் பார்க்க ரசிகர்கள் வர்றாங்க அப்படீங்கற மாதிரி ஏதோ டயலாக் அவர் பேசணும்.

குனிஞ்தை பார்த்து

சந்தானம் அந்த டயலாக்கை பேசிட்டு இருந்தார். அப்போ காலை கொசு பயங்கரமா கடிச்சுது.

கொசுவை அடிக்கறதுக்காக இப்படி கீழே குனிஞ்சேன். நான் குனிஞ்சதை பார்த்து உடனே அப்படியே பின்னாடி ஒரு எகிறு எகிறுனாங்க.

அப்புறம் விஜய், சந்தானம் அப்புறம் அவங்க கூட ப்ரண்ட்ஸா நடிச்சவங்க எல்லாம் சிரிச்சுக்கிட்டே வர்றாங்க.

சந்தானம் சொன்னது

சந்தானம் கிட்ட ஏன் சிரிக்கறீங்கன்னு கேட்டப்போ, அக்கா நீங்க கீழே குனிஞ்சப்போ செருப்பை தான் எடுக்கறீங்கன்னு நெனைச்சிட்டோம்.

என்னடா பேசறே, டயலாக் நீங்க பேசறீங்க, என்றேன்.

இல்லக்கா, ஒரு செகன்ட் அப்படியே ஜெர்க் உட்டுட்டேங்க என்று சிரித்தபடியே கூறினார்.

காலில் கொசு கடிச்சதுக்காக குனிஞ்சதை பாத்துட்டு சந்தானம் தன்னிடம் சொன்ன வார்த்தையை ஓப்பனாக நடிகை ஷகீலா இந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version