பார்த்திபன் சொன்னது எல்லாமே பொய்.. இது தான் உண்மை..! நடிகை சீதா சுளீர்..!

தமிழ் சினிமாவில் நடிகை சீதா பல வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருந்தவர். ஆண்பாவம் படத்தில் அவரது நடிப்பு பாராட்டை பெற்றது.

தொடர்ந்து உன்னால் முடியும் தம்பி படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அடுத்து விஜயகாந்த், சத்யராஜ், அர்ஜூன், பிரபு, ராமராஜன் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

பார்த்திபன்..

இந்நிலையில், புதிய பாதை படத்தில் நடிகர் பார்த்திபனுடன் நடித்தார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையில் காதல் ஏற்பட்டு 1990ம் ஆண்டில் திருமணம் செய்துக்கொண்டனர்.

திருமணத்துக்கு பிறகு நடிகை சீதா நடிக்கவில்லை. 3 குழந்தைகளுக்கு அவர் தாயானார். இந்நிலையில், பார்த்திபனை சீதா பிரிந்தார்.

அடுத்து சினிமாவில் போதிய வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் சீரியல்களில் சீதா நடித்தார். அப்போது சீரியல் நடிகை சதீஷ் உடன் காதல் ஏற்பட்டதால், 2010ம் ஆண்டில் சீதா, சதீஷை 2வது திருமணம் செய்துக்கொண்டார்.

ஆனால் அவர்களது திருமண வாழ்க்கை ஆறு ஆண்டுகள் மட்டுமே நீடித்த நிலையில் 2016ம் ஆண்டில் இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்துக்கொண்டனர்.

இந்நிலையில், நடிகர் பார்த்திபன் சில மேடைகளில் பேசும்போது, சீதாவின் காதலை ஏற்றுக்கொள்ளக் கூடிய சூழ்நிலையில் இருந்ததாக பேசியுள்ளார்.

சீதா பதிலடி..

இதற்கு பதிலளிக்கும் விதமாக நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள சீதா, நடிகர் பார்த்திபன் ஆரம்ப காலகட்டத்தில் நடிகை சீதாவுடன் போனில் பேசும்போது அந்த 3 வார்த்தைகளை அடிக்கடி சொல்லுமாறு கூறுவார்.

அதை நான் சொல்லவே 10 நாட்கள் எடுத்துக்கொண்டேன். இருவருக்கும் இடையே இருந்த காதல் உண்மை.

இந்நிலையில், நடிகை சீதாவின் காதலை ஏற்றுக்கொள்ளும் சூழலில் இருந்தேன் என்று மேடைகளில் சொன்னது பொய். ஆனால் நான் நினைத்த மாதிரி திருமண வாழ்க்கை இல்லை. திருமணத்துக்கு பிறகு நாம் எப்படி எல்லாமோ இருக்கலாம் என்று நினைத்திருந்தேன்.

ஆனால் அதெல்லாம் எதுவுமே நடக்காத போதுதான் எனக்கு அந்த திருமண வாழ்க்கையில் விரக்தியே ஏற்பட்டது என, நடிகை சீதா அந்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

நடிகை சீதாவிடம் போனில் பேசும்போது, அந்த 3 வார்த்தைகளான ஐ லவ் யு சொல்லு, சொல்லு என பலமுறை பார்த்திபன் கேட்டார்.

இந்நிலையில், பார்த்திபன் மேடையில் சொன்னது எல்லாமே பொய், இதுதான் உண்மை என பதிலடி தந்திருக்கிறார் அவரது முன்னாள் மனைவி சீதா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version