ஒன்னே ஒன்னு போட்டதுக்கு.. அது பெருசுன்னு போயிட்டான் என் லவ்வர்..! ஆனால் இப்போ.. ரகசியம் உடைத்த ஷகீலா..!

நடிகை ஷகீலா தன்னுடைய பள்ளிக்காலத்தில் இருந்து நிறைய பேரை காதலித்து இருப்பதாக சமீபத்திய பேட்டி ஒன்று கூறியிருக்கிறார். ஆனால் 10 ஆண்டுகளாக நான் காதலித்த ஒருவன் என்னை விட்டு பிரிந்த போது நிஜமாகவே நான் வருத்தப்பட்டேன் என பேசி இருக்கிறார்.

அவர் பேசிய பேச்சின் முழு தொகுப்பு தான் இந்த பதிவு. நடிகை ஷகீலா அதனுடைய இளம் வயதிலேயே பிட்டுப்படங்களில் நடித்த வந்துவிட்டார். ஆரம்பத்தில் இவருடைய அழகை வைத்து கோடிக்கணக்கில் சம்பாதித்தனர் தயாரிப்பாளர்கள்.

ஆனால் நடிகை ஷகீலாவிற்கு ஒரு படத்திற்கு சம்பளம் பேசாமல்.. ஒரு நாளைக்கு இத்தனை ஆயிரம் என்று பேசி இருக்கிறார்கள். விவரம் தெரியாமல் நடிகை ஷகீலாவும் சில ஆயிரங்களுக்கு படங்களை நடித்துக் கொடுத்திருக்கிறார்.

ஆனால் அந்த காலத்திலேயே இவருடைய படங்கள் கோடி கணக்கில் வசூல் செய்தன என்பதுதான் இங்கே விஷயம். மட்டுமில்லாமல் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று அழைத்துச் சென்று நிறைய காட்சிகளை படமாக்கி அந்த காட்சிகளை நான்கு படங்களாக பிரித்து அந்தந்த படங்களில் சேர்த்து நடிகை ஷகீலா  நடித்த படம் என்று கூறி மோசடியிலும் ஈடுபட்டிருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

ஆனால் இவற்றை எப்படி எதிர்கொள்வது என தெரியாமல் இருந்திருக்கிறார் ஷகீலா. ஏன் என்றால்.. நடிகை ஷகீலா பிட்டு பட நடிகையாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்தார் என்றாலும்.. இவர் மீது கடுமையான எதிர்ப்புகள் அப்போது இருந்தது.

பொதுவெளியில் ஷகீலா என்று கூறினாலே மோசமான பார்வையுடன் பார்க்கக்கூடிய போக்கு இருந்தது. இன்னும் சொல்லப்போனால் அந்த காலகட்டத்தில் சமூகமே அப்படித்தான் இருந்தது. ஆனால் தற்போது ஆபாச படங்களில் நடித்துவிட்டு கூட திரைப்படங்களில் நடிக்கும் நடிகைகள் இருக்கிறார்கள்.

பொதுவெளியில் வந்து வெளிப்படையாக பேசக்கூடிய நடிகைகள் இருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக சன்னிலியோனை கூறலாம். இன்று காலகட்டமே மாறி இருக்கிறது. இதனால் தனக்கு நேர்ந்த சில மோசமான சம்பவங்களை சமீபத்திய பேட்டிகளில் நடிகை ஷகீலா வெளிப்படையாக கூறிக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் 10 வருடமாக காதலித்து தன்னுடைய காதலன் சட்னியில் ஒரே ஒரு மிளகாய் போட்டு விட்டேன் என்பதற்காக சாப்பாட்டை தூக்கி வீசிவிட்டு சத்தம் போட்டார்.

அவருக்கு காரம் என்றால் சுத்தமாக பிடிக்காது. ஆனால் எனக்கு காரசாரமான உணவுகள் தான் வேண்டும். எனவே ஒரே ஒரு மிளகாய் மட்டும் அன்று சட்னியில் நான் சேர்த்திருந்தேன்.

ஒன்னே ஒன்னு தான் போட்டேன் என்று கூறியதற்கு அது பெரிய மிளகாயாய் இருக்கும் என்று கூறி சண்டை போட்டான். தற்பொழுது அமெரிக்காவில் ஐடி ஊழியர் ஒருவருக்கு கணவனாக இருக்கிறான்.

இப்போதும் அவர்கள் தொடர்பில் தான் இருக்கிறேன். ஒரு முறை சாப்பிட்டு கொண்டிருக்கும் பொழுது எனக்கு போன் செய்தான்.

என் மனைவி பேசுவதைக் கேள் என்று கூறினான். அவர் அவருடைய மனைவி இவனை மரியாதை குறைவாக அவன் இவன் என்று பேசுகிறார்.

சாப்பாடு மோசமாக இருக்கிறது என்று கூறியதற்கு நான் இதைத்தான் செய்வேன் இப்படித்தான் சமைப்பேன் இதைத்தான் நீ சாப்பிட வேண்டும் என்று கடுமையாக திட்டுகிறார்.

இதனை கேட்டபோது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆஹா.. ஒரு காலத்தில் ஒரே ஒரு மிளகாய் போட்டேன் என்பதற்காக சாப்பாட்டு தட்டை வீசிய உனக்கு இது தேவைதான் என்று சந்தோஷமாக இருந்தது.. கடவுள் இருக்கிறான்.. என கூறியிருக்கிறார் நடிகை ஷகீலா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version