“நான் காதலித்த எல்லோருமே.. என்னிடம் இதை பண்ணிடானுங்க..” – வெக்கமே இல்லாமல் ஓப்பனாக பேசிய ஷகீலா..!

பிரபல நடிகை ஷகிலா தன்னுடைய காதலர்கள் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பதிவு செய்திருக்கிறார்.அவர் கூறிய விஷயங்கள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது என்று தான் கூற வேண்டும்.

தன்னுடைய பள்ளி காலத்திலிருந்து தன்னுடைய பருவ வயது காதல் வரை அனைத்தையும் புட்டு புட்டு வைத்திருக்கிறார் நடிகை ஷகிலா. அவர் கூறியதாவது, நான் ஒரே நேரத்தில் மூன்று நான்கு பேரை காதலிப்பேன்.

பள்ளியில் படிக்கும் போது ஒரு முறை எனக்காக இரண்டு பேர் அடித்துக் கொண்டார்கள். அப்போது என்னுடைய உறவினர் பையன் ஒருவன் என்னை அழைத்து இங்க பாரு உனக்காக ரெண்டு பேரும் அடிச்சிட்டு இருக்காங்க.. நீ யாரை லவ் பண்றேன்னு சொல்லு என கேட்டான்.

அப்போது, நான் வீட்டில் இருக்கும் போது இவனை லவ் பண்ணுவேன்.. ஸ்கூலுக்கு போனதும் அவனை லவ் பண்ணுவேன்.. என்று இரண்டு போரையும் கையை காட்டி கூறினேன். அப்போது அவன், பாத்தியாடா.. இவளுக்கு லவ் என்றால் என்ன என்று கூட தெரியவில்லை இவளுக்காக நீங்கள் அடித்துக் கொண்டிருக்கிறீர்கள் என சொல்லி அவர்களை அனுப்பி விட்டான்.

அதன் பிறகு நாட்கள் செல்ல செல்ல நிறைய பேரை காதலித்தேன். தற்போது அவர்கள் என்னுடன் தொடர்பில் தான் இருக்கிறார்கள். ஆனால் நான் அதிகம் ஏமாந்தது ஒருவரிடம் தான், கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் அவரை காதலித்தேன்.

ஆனால் மார்ச் மாதம் அவரை பிரிந்தேன். டிசம்பர் மாதம் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இது தெரிந்ததும். என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. உடனே தொலைபேசியில் தொடர்பு கொண்டு பத்து வருடமாக என்னை காதலித்துக் கொண்டு சில மாதங்களில் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டிருக்கிறாய் என்றால் நீ என்னை என்னவென்று காதலித்தாய்.

உன்னுடைய காதலின் அர்த்தம் என்ன…? எதற்காக என்னை காதலித்தாய்..? என்றெல்லாம் கேள்வி எழுப்பினேன். ஆனால் ஒரு விஷயம் மட்டும் என்னால் தெளிவாக சொல்ல முடியும். என்னவென்றால், நான் காதலித்த அனைவருமே என்னை கஷ்டப்படுத்தி இருக்கிறார்கள் ஒரு வழியில்லை என்றால் வேறு ஒரு வழியில் என்னை கஷ்டப்படுத்தி இருக்கிறார்கள்.

என்னை காயப்படுத்தி இருக்கிறார்கள். ஆனால், தற்பொழுது நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஏனென்றால் என்னை காயப்படுத்திய எவனும் தற்போது அவர்களுடைய மனைவியுடன் சந்தோஷமாக இல்லை.

இதை அவர்கள் வாயிலேயே நான் கூற கேட்டிருக்கிறேன். உதாரணத்துக்கு சொல்கிறேன், 10 வருடமாக நான் காதலித்த அந்த நபர் தற்பொழுது அமெரிக்காவில் செட்டில் ஆகி இருக்கிறார். அவருடைய வேலை தன்னுடைய மனைவிக்கு சமைத்து போடுவது தான்.

அவருடைய மனைவி மென்பொருள் நிறுவனத்தில் மிக உயரிய பதவியில் இருக்கிறார். இவர் அவருக்கு சாப்பாடு சமைத்து போட்டுக் கொண்டிருக்கிறார். அவர் தமிழ்நாட்டில் செய்யாத சேட்டைகள் கிடையாது. பெரிய ராஜா போல கையை வீசிக்கொண்டு நடப்பார். அவர் கையை வீசி வீசி நடக்கும் தோரணையில் வழியில் இருக்கும் அனைவரும் பறந்து போய் விடுவார்கள் அந்த அளவுக்கு கெத்தாக சுற்றிக் கொண்டிருப்பார்.

ஆனால், தற்பொழுது தன்னுடைய பொண்டாட்டிக்கு சாப்பாடு ஆகி போட்டுக் கொண்டிருக்கிறார். இதெல்லாம் கேட்கும் பொழுது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. கடவுள் இருக்கிறான் என்ற ஒரு நம்பிக்கை இருக்கிறது என கலகலப்பாக கூறியிருக்கிறார் நடிகை ஷகிலா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version