ஒரு இரவுக்கு இத்தனை லட்சம்.. ஆனால்.. கூச்சமின்றி ஓப்பனாக கூறிய ஷகீலா.!

ஆரம்ப காலத்தில் மலையாள திரையுலகில் துணை நடிகையாக நடிக்க ஆரம்பித்த ஷகீலா தனது 15 வயதில் ப்ளே கேர்ள்ஸ் என்ற படத்தில் நடித்ததின் மூலம் ஆண்கள் விரும்பும் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து இருக்கிறார்.

ஷகீலா படம் ரிலீஸ் ஆகிறது என்று தெரிந்தால் மிகப் பெரிய நடிகர்கள் கூட அவர்களின் பட ரிலீஸ் தள்ளிப் போடுவார்கள். அந்த அளவு இவரது படத்தை பார்க்க திரையரங்குகளில் கூட்டம் அலைமோதும்.

கவர்ச்சி மலை..

நடிகை ஷகிலா ஆரம்ப நாட்களில் மலையாள படங்களில் அதிக அளவு நடித்து இருக்கிறார். இவர் நடிப்பில் வெளி வந்த கிணரத்தும்பிகள் என்ற மலையாள படம் மாபெரும் வெற்றியை தந்தது. இது வரை சுமார் 110 க்கும் மேற்பட்ட தென்னிந்திய மொழி படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

தமிழில் மறுமலர்ச்சி படத்தில் விவேக்குக்கு ஜோடியாக நடித்தவர். பல குணச்சித்திர வேதங்களிலும் நகைச்சுவை வேடங்களிலும் நடித்து அசத்தியவர். மேலும் ஜெயம், அழகிய தமிழ் மகன், பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற படங்களிலும் இவரை நீங்கள் பார்த்திருக்கலாம்.

திரை உலகத்தைச் சார்ந்தவர்கள் இவரை லேடிலால், சைக்ளோன் என்ற அடைமொழிகளை தந்து அன்பாக அழைக்கிறார்கள். இவரது பிரபலத்துக்கு காரணமே இவர் நடிக்கக்கூடிய படங்களில் பல பால் உணர்வு கிளர்ச்சியை தூண்டக்கூடிய படங்களாக அமைந்து இருக்கும்.

இந்த காரணத்தால் தான் இவரை கவர்ச்சி மலை என்று அனைவரும் கூறியிருக்கிறார்கள். கவர்ச்சி நடிகையாக திகழ்ந்த ஷகீலா 90 காலகட்டங்களில் திரை உலகில் கொடி கட்டி பறந்த நடிகை.

மலையாள திரை உலகம் சகிலாவிற்கு தடை விதித்ததால் அவர் தமிழ்நாட்டில் செட்டிலானார். இதனை அடுத்து இவர் கவர்ச்சி படங்களில் நடிப்பதை தவிர்த்து விட்டு தமிழ் சினிமாவில் காமெடி வேடங்களை தேர்வு செய்து நடித்திருந்தார்.

ஒரு நாளைக்கு 4 லட்சம்..

அடல்ட் நடிகை என்று முத்திரை குத்தப்பட்ட ஷகீலா, சில்க் மிதாவின் கையால் அறை வாங்கியதால் அவருக்கு போட்டியாகவே திரை உலகம் இவரை முன்னிறுத்தியது. அதற்கு தகுந்தது போல் இவரும் பல அடல்ட் படங்களில் நடித்திருக்கிறார்.

இவரின் சில படங்கள் 100 நாட்கள் ஓடியதை பார்த்து அனைவரும் ஆச்சரியம் அடைந்திருக்கிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் ஷகீலா பேசும் போது தன்னைக் குறித்து விக்கிபீடியாவில் இருக்கும் சில தகவல்கள் பொய்யானது என கூறி இருக்கிறார்.

மேலும் ஒரு நாளைக்கு மட்டும் ரூபாய் 4 லட்சம் சம்பளம் வாங்கி இருப்பதாகவும், தன்னிடம் இருந்த எல்லா பணத்தையும் தன்னுடைய அக்கா எடுத்துக் கொண்டார் என்ற ஷாக்கிங் ஆன விஷயத்தை கூறியிருக்கிறார்.

இதற்கிடையே ஷகீலா விஜய் டிவியில் நடந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு அவரது மற்றொரு முகத்தை அறிந்து கொண்டு அனைவரும் அவரோடு நட்புடன் பழகியதோடு அம்மா என்று பாசத்தோடு அழைத்தார்கள்.

இவர் நமிதா என்ற திருநங்கையை தத்தெடுத்து அவருக்கு வேண்டியவற்றை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான் இவர் ஒரு இரவுக்கு 4 லட்சம் ரூபாய் சம்பளமாக பெற்ற விஷயம் ஆனது பரபரப்பாக ரசிகர்கள் மத்தியில் பேசப்படக்கூடிய பேசும் பொருளாகி விட்டது.

ஆனால் இது குறித்து உண்மையான நிலைமை என்ன என்பதை அவர் மனம் திறந்து கூறியது அனைவரையும் சிந்திக்க வைத்துள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version