திரை உலகில் என்பது “நடிகர் அஜித்தின் மச்சானுடன் காதல்.. அதுவும் அந்த நேரத்தில்..” ஷகிலா வெளியிட்ட பகீர் தகவல்..!

கவர்ச்சி நடிகை என்ற முத்திரையோடு தமிழ், மலையாள திரை உலகில் தனக்கு என்று ஒரு ரசிகர் வட்டத்தை வைத்திருக்கும் நடிகை ஷகிலா தன்னுடைய அடல்ட் காதல் பற்றி தற்போது ஓப்பனாக பேசியிருக்கிறார்.

அதுவும் அவர் யாரை காதலித்திருக்கிறார் என்று பார்த்தால் உங்களுக்கு அது ஆச்சரியத்தை ஏற்படுத்தும். தன்னை விட வயது குறைவான அஜித் மச்சினன் ரிஷி ரிச்சர்ட் உடன் காதல் இருந்ததை வெட்கமில்லாமல் பேசி இருக்கிறார்.

1994 ஆம் ஆண்டு ப்ளே கேர்ள்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஷகீலா நடிகை சில்க் ஸ்மிதாவின் தங்கையாக நடித்திருந்தார். மேலும் இவரை விரும்பாத ரசிகர்களை இல்லை என்று கூற கூடிய அளவிற்கு கவர்ச்சி கன்னியாக திகழ்ந்தார்.

ஒரு காலகட்டத்தில் மலையாளத்தில் இவரின் படம் வெளிவருகிறது என்றால் மலையாள முன்னணி நடிகர்கள் கூட அவர்களது படங்களை ரிலீஸ் செய்ய தயக்கம் காட்டக்கூடிய அளவிற்கு உச்ச நடிகையாக திகழ்ந்தவர்.

தற்போது அந்த கவர்ச்சி இமேஜை உடைத்து விட்டு தனக்கு நடிக்கவும் தெரியும் என்று சொல்லக்கூடிய வகையில் விஜய் டிவி தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய மாறு பக்கத்தையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தெலுங்கு, மலையாளம் என பல படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர் தெலுங்கில் நடந்த பிக் பாஸ் சீசன் 7ல் கலந்து கொண்டிருக்கிறார். அத்தோடு இவர் தன் காதல் குறித்து பேசிய தகவல் தற்போது இணையத்தில் பெரிய அளவு ட்ரெண்டிங் ஆகிவிட்டது.

எதையும் வெளிப்படையாக பேசக்கூடிய மனம் படைத்த இவர் ஏற்கனவே நான் 10 பேரையாவது காதலித்திருப்பேன் என்று கூறியது கடும் அதிர்வுகளை ஏற்படுத்திய நிலையில், 10 வயதிலேயே சுரேஷ் ரெட்டி என்பவரை காதலித்ததாகவும் அத்தோடு தன்னுடைய  லவ் பற்றி பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் தனது அடல்ட் லவ் குறித்து பேசிய இவர் அஜித்தின் மச்சினன் ரிஷியுடன் காதல் ஏற்பட்டது குறித்து பேசி இருக்கிறா.ர் ஆரம்பத்தில் இருவர் இடையே நட்பு ஏற்பட்டு அது காதலா மலர்ந்ததாகவும், எதிர்காலத்தில் வாய்ப்பு கிடைத்தால் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற முடிவில் இருந்ததாகவும் கூறி இருப்பது கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version