“கமலஹாசனுடன் ஊட்டியில்.. அதை கூட அணியாமல் கொடுமை..” சினிமாவை விட்டே ஓடிட நினைத்த சில்க் ஸ்மிதா..! அவரே கூறிய தகவல்..!

சில்க் ஸ்மிதா பெயரை கேட்டாலே 80-களின் மனதுகளில் இனம் புரியாத சிறகு விரிந்து விண்ணை நோக்கி பறந்து செல்லும். அந்த அளவு ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக வாழ்ந்தவர் சில்க் ஸ்மிதா.

தமிழ் திரை உலகில் இவர் ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு ,சத்யராஜ் என்று முன்னணி நடிகர்களாக திகழ்ந்த நடிகர்களோடு இணைந்து நடித்திருக்கிறார். கவர்ச்சி நடிகையான இவருக்கு ஏதாவது ஒரு படத்தில் கவர்ச்சி காட்டாமல் குணச்சித்திர வேடத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.

அந்த ஆசை நிறைவேற கூடிய விதமாக அலைகள் ஓய்வதில்லை படத்தில் சிறப்பான ரோலில் இவர் நடித்திருப்பார். இதனை அடுத்து இந்த படத்தை பார்த்த எம்ஜிஆர் கூட இது போன்று வேடங்களில் சில தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று அறிவுரை கூறியிருக்கிறார்.

எனினும் அவருக்கு அத்தகைய வேடங்கள் தொடர்ந்து கிடைக்காமல், கவர்ச்சி வேடங்களை கிடைத்தது. குறிப்பாக கவர்ச்சி நடனம் ஆடும் பெண்ணாகவே அவர் திரையுலகில் முத்திரை குத்தப்பட்டார்.

மேலும் பாலு மகேந்திரா படங்களில் மட்டும் சற்று வித்தியாசமான கேரக்டர் ரோல்களை செய்து இருக்கிறார். குறிப்பாக பாலு மகேந்திரா படத்தில் பணக்கார பெண்ணாக நடித்திருக்க கூடியவர், மூன்றாம் பிறை திரைப்படத்தில் பொன்மேனி உருகுதே.. என்ற பாடலுக்கு கமலோடு இணைந்து கவர்ச்சி நடனம் ஆடியிருப்பார்.

இந்தப் பாடலுக்கான காஸ்ட்யூம்-ஐ பொறுத்த வரை பெரிதாக சொல்லக்கூடிய அளவு சில்க் ஸ்மிதாவிற்கு காஸ்டியூம் அமையவில்லை. மேனி அழகு முழுவதும் தெரியக்கூடிய வகையில் குட்டியோடு உடையை மட்டும் அணிந்து காலில் செருப்பு கூட போடாமல் ஊட்டி குளிரில் நடனம் ஆடி இருப்பார்.

இந்த நடன காட்சியில் அவர் ஆடும் போது கமலோடு இணைந்து ஆடியதை ரசிகர்கள் பலரும் பாராட்டி இருக்கிறார்கள். எனினும் கடுமையான சிரமங்களை அனுபவித்து தான் இந்த காட்சியில் நடனம் ஆடி இருக்கிறார். இதனை அடுத்து ஒரு கட்டத்தில் சினிமாவை வேண்டாம் என ஓடி விடலாமா? என்ற எண்ணம் அவருக்கு தோன்றியுள்ளது.

ஆனால் தியேட்டரில் இந்த படத்தை பார்த்ததோடு அந்த பாடல் காட்சிக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பை பார்த்த பிறகு பட்ட பாடுக்கு நல்ல பலன் கிடைத்தது எனத் தோன்றியதாக சில்க் ஸ்மிதா கூறியிருக்கிறார். இதனை தொடர்ந்து இது போன்ற பல வேடங்களில் நடனம் ஆடக்கூடிய வாய்ப்பு அவருக்கு வந்து சேர்ந்துள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version