பிரபல நடிகரின் மகளை திருமணம் செய்யும் நடிகர் சிம்பு..! – பரபரப்பில் கோலிவுட்..!

நடிகர் சிம்புவுக்கு தற்பொழுது 40 வயது ஆகின்றது சென்னையில் கடந்த 1983 ஆம் ஆண்டு பிறந்த இவர் உறவைக்காத்த கிளி என்ற திரைப்படத்தில் தன்னுடைய ஒரு வயதிலேயே நடிகராக அறிமுகமானார்.

டி ஆர் ராஜேந்தர் இயக்கி நடித்து இருந்த இந்த திரைப்படத்தில் நடிகர் சிம்பு குழந்தையாக திரையில் தோன்றினார். அதனை தொடர்ந்து 2002 ஆம் ஆண்டு காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமான நடிகர் சிம்பு அதனை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் ஹீரோவாக தொடர்ந்து நடித்து வந்தார்.

இடையில் காதல் சர்ச்சைகள்.. படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர்களுடன் சண்டை.. படப்பிடிப்புக்கு தாமதமாக வருவது.. இப்படி நடிகர் சிம்பு மீது எக்கச்சக்கமான சர்ச்சைகள் குவிந்து கிடக்கின்றன.

ஆனாலும் தனக்கென வெறித்தனமான ரசிகர் பட்டாளத்தையும் கொண்டு இருக்கிறார் நடிகர் சிம்பு என்பது தான் உண்மை. ரசிகர் பட்டாளம் என்றால் சாதாரண ரசிகர் பட்டாளம் அல்ல நடிகர்கள் விஜய் அஜித் ஆகியோருக்கு இருக்கக்கூடியது போலவே வெறித்தனமான ரசிகர் பட்டாளம் நடிகர் சிம்பு இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

இடையில் பல ஆண்டுகள் சினிமாவிலிருந்து விலகி இருந்தார் நடிகர் சிம்பு.. என்றாலும் கூட அவருடைய ரசிகர் பட்டாளம் குறைந்தபாடில்லை. இடையில் பீப் சாங் என்ற ஒரு பாடலை வேறு பாடியிருந்தார் நடிகர் சிம்பு. இதுவும் மிகப்பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியது. கைது செய்யும் அளவுக்கு சென்றது இந்த விவகாரம்.

இது ஒரு பக்கம் இருக்க நடிகர் சிம்பு நடிகை நயன்தாரா மற்றும் நடிகை ஹன்சிகா ஆகியோர காதலித்து பிரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு எப்போது திருமணம் நடக்கும் என்று ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில் அவ்வப்போது இதுவரை பற்றி திருமணம் செய்திகள் வெளி வருவதும் அது வதந்தி என்று இந்து தரப்பில் மறுப்பு தெரிவிப்பதும் வாடிக்கையாக நடந்து வருகிறது.

இந்நிலையில்தான் நடிகர் சிம்பு தற்போது பிரபல நடிரின் மகள் ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அந்த நடிகரின் மகள் வேறு யாரும் கிடையாது நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார் தான். இருவரும் திருமணம் செய்து கொள்ள இது வீட்டாரும் பேசியிருக்கிறார்கள் என்றும் இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிகிறது.

கோடம்பாக்கம் வட்டாரத்தில் இந்த விவகாரம் தான் தற்பொழுது பரபரப்பாக பேசப்பட்டு கொண்டிருக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version