ரிலேஷன்ஷிப்பில் இருந்தது சிவகார்த்திகேயனுக்கு தெரியும்..!! – கதறும் பிரபல பாடகி..!

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்ட அயலான் திரைப்படமானது தற்போது ரிலீசுக்கு தயாரான நிலையில் உள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் இருந்தே பல்வேறு பிரச்சனைகளை இந்த திரைப்படம் சந்தித்துள்ளது.

தற்போது சிவகார்த்திகேயனோடு இணைந்து பணியாற்றிய பல பிரபலங்கள் அவர்களது மறக்க முடியாத நினைவுகளை பற்றி பகிர்ந்து இருக்கிறார்கள். அந்த வரிசையில் சிவகார்த்திகேயன் பற்றி விஜய் டிவி பிரபல பாடகி சௌந்தர்யா சில விஷயங்களை ஓபன் ஆக பகிர்ந்து இருக்கிறார்.

அதில் பாடகி சௌந்தர்யா சிவகார்த்திகேயனை பற்றி பேசுகையில் இவருக்கு நான் வைத்திருந்த ரிலேஷன்ஷிப் எப்படியோ தெரிந்துவிட்டது. ஒருமுறை எனக்கும் என் பாய் பிரண்டுக்கு சண்டை நடந்திருக்கிறது. அப்போது சூப்பர் சிங்கர் குழுவில் இருந்து எனக்கு கால் செய்து இருக்கிறார்கள். அந்த கால் எனக்கு இரண்டாவது காலாக போய்க் கொண்டிருந்தது இதை எப்படியோ சிவகார்த்திகேயன் தெரிந்து கொண்டார்.

இதனை அடுத்து நிகழ்ச்சி நடைபெறக்கூடிய சமயத்தில் என்ன சௌந்தர்யா உங்களுக்கு கால் செய்தால் செகண்ட் கால் போகுதாமே யார்? யார்? கிட்ட பேசிட்டு இருந்தீங்க என்று கேட்டு விட்டார். என் வீட்டுக்கு எந்த விஷயம் எதுவுமே தெரியாது.

எனவே அதை கட் செய்து விடுமாறு நிறுவனத்திடம் காலில் விழுந்து கேட்டுக் கொண்டதாகவும் இதனை அடுத்து சிவகார்த்திகேயனிடம் எதையுமே ஷேர் பண்ண கூடாது என்ற முடிவை உடனடியாக எடுத்து விட்டதாகவும் சௌந்தர்யா தெரிவித்திருக்கிறார்.

இதனை அடுத்து சௌந்தர்யா ரிலேஷன்ஷிப்பில் இருந்தார் என்ற செய்தியை அறிந்து கொண்ட ரசிகர்கள் யாரை நம்புவது என்று தெரியவில்லை என்று பேசியிருப்பதோடு சிவகார்த்திகேயனை பற்றி சவுந்தர்யா கூறிய கருத்துக்களை பேசும் பொருள் ஆக்கிவிட்டார்கள்.

அந்த வகையில் இந்த விஷயமானது தற்போது இணையம் முழுவதும் பேசப்படுகின்ற விஷயமாக மாறிவிட்டது. இதனை அடுத்து ரசிகர்கள் எந்த விஷயத்தை பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version