“நீ ஒன்னும் கிழிக்க வேண்டாம்..” சீரியஸ் ஆன சிவகார்த்திகேயன் அம்மா..!

அட.. இவரெல்லாம் திரைக்கு நடிக்க வருவாரா? என்று புருவத்தை உயர்த்தி பார்க்கக் கூடிய அளவில் இன்று தமிழ் திரையுலகில் முன்னணி நாயகனாக விளங்கும் சிவகார்த்திகேயன் ஆரம்ப நாட்களில் தொலைக்காட்சிகளில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக திகழ்ந்தவர்.

இதனை அடுத்து இவர் மிமிக்ரி செய்வதை பார்த்து இவருக்கு என ஒரு ரசிகர் பட்டாளம் உருவானது. அடுத்து கலக்கப்போவது யாரு எனும் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்து, எங்கள் வீட்டுப்பிள்ளை என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்பட்ட இவர் குறும்படங்களில் நடித்தார்.

மேலும் இவர் விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி தனது அற்புதமான பேச்சு திறமையால் பலரையும் கவர்ந்தார். இதனால் சிவகார்த்திகேயனுக்கு மெரினா படத்தில் நடிக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்திக்கொண்ட இவர் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்றார்.

அந்த வகையில் இவர் மனம் கொத்தி பறவை படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விட்டார். இதனை அடுத்து கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல் போன்ற படங்கள் வெற்றி பெற உச்சகட்ட கதாநாயகனாக உயர்ந்தார்.

இவர் நடிப்போடு நின்று விடாமல் தனது திறமையை தயாரிப்பு, பாடல் எழுதுவது, பாடுவது என பல முகங்களை கொண்ட சிறந்த மனிதனாக விளங்குகிறார். வரும் பொங்கலுக்கு இவரது அயலான் திரைப்படம் வெளி வர உள்ளது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் தனது மாமா மகளான ஆர்த்தியை கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். சின்னத்திரையில் பணிபுரிந்து வரும் நேரத்திலேயே இவர்கள் திருமணம் நடந்து முடிந்து விட்டது. தற்போது ஆராதனா, குகன் தாஸ் என்று இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்.

மேலும் சிவகார்த்திகேயன் திருமணமான சமயத்தில் கொடுத்த பேட்டி ஒன்று தான் வைரலாக பரவி வருகிறது. மேலும் இந்த பேட்டியில் எடுக்கப்பட்ட வீடியோவில் தனக்கு இப்போதுதான் 21, 22 வயதாகிறது. இந்த சமயத்தில் நான் காதலித்து திருமணம் செய்து கொள்ளலாம் என்று இருந்தேன்.

ஆனால் என் அம்மா அதெல்லாம் நீ ஒன்றும் பண்ணி கிழிக்க வேண்டாம். உன்னுடைய மாமா பெண்ணை திருமணம் செய்து கொள் என்று சொல்லிவிட்டதாக நகைச்சுவையோடு பகிர்ந்து இருக்கிறார்.

இந்த பகிர்வு தான் தற்போது ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகி விட்டது மேலும் இந்த வீடியோவை அனைவரும் தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version