“போதும்.. இதுக்கு மேல.. ” இமான் குற்றச்சாட்டு குறித்து முதன் முறையாக சிவகார்த்திகேயன் கொடுத்த பதில்..!

நடிகர் சிவகார்த்திகேயன் இமான் இடையே இருக்கும் பிரச்சனை என்ன என்று புதிதாக சொல்லி தெரிய வேண்டியது இல்லை. நடிகர் சிவகார்த்திகேயன் எனக்கு மிகப் பெரிய துரோகம் செய்துவிட்டார்.

இனிமேல் அவருடன் சேர்ந்து பணியாற்றுவது இந்த ஜென்மத்தில் நடக்காத ஒரு விஷயம் என்று காட்டமான தன்னுடைய குற்றச்சாட்டை வைத்திருந்தார் இசையமைப்பாளர் இமான்.

இதனை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனும் இசையமைப்பாளர் இமானின் முன்னாள் மனைவி மோனிகாவும் தவறான உறவில் இருந்தார்கள் என்று கூட இணைய பக்கங்களில் தாறுமாறாக தகவல்கள் வைரலாகின.

இதற்கெல்லாம் பதில் கொடுக்காமல் வாயே திறக்காமல் இருந்தார் நடிகர் சிவகார்த்திகேயன். இந்நிலையில், இவருடைய அயலான் திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ள நிலையில் பல்வேறு இணைய ஊடகங்களில் பேட்டி கொடுத்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.

அந்த வகையில், முதன்முறையாக பிஹைன்ட்வூட்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த ஒரு பேட்டியில் கலந்து கொண்டார் சிவகார்த்திகேயன்.

நடிகர் சின்னி ஜெயந்த் தொகுப்பாளராக அமர்ந்திருக்க நடிகர் சிவகார்த்திகேயன் இந்த பேட்டியில் கலந்து கொண்டார். அயலான் படம் குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்பிய சின்னி ஜெயந்த் ஒரு கட்டத்தில் இமான் சர்ச்சை குறித்து மறைமுகமாக ஒரு கேள்வி அனுப்பினார்.

பலரும் சோசியல் மீடியாவில் மெசேஜ் கொடுக்க வேண்டும்.. மெசேஜ் கொடுக்க வேண்டும்.. என்று கூறுகிறார்கள். அவர்களுக்கு உங்களுடைய மெசேஜ் என்ன..? என்று கேள்வி எழுப்பினார்.

இதனை புரிந்து கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் போதும் ஏற்கனவே இன்ஸ்டாகிராம் பேஸ்புக்  வாட்சப் என மெசேஜ்கள் குவிந்து கிடக்கிறது. இதுவே போதும்.

மக்களுக்கு இதுக்கு மேலும் மெசேஜ் கொடுக்காமல் இருப்பது தான் சிறந்தது என நான் நினைக்கிறேன் என பதில் கொடுத்திருக்கிறார்.

இதனை கேட்ட ரசிகர்கள் பலரும் நடிகர் சிவகார்த்திகேயன் இமான் பிரச்சனை குறித்து இதற்கு மேலும் கூற விரும்பவில்லை என்பதைத்தான் ஏற்கனவே சமூகவலைகளில் மெசேஜ்கள் குவிந்து கிடக்கிறது இதற்கு மேல் நானும் எந்த மெசேஜும் கொடுக்க விரும்பவில்லை எனக் கூறியிருக்கிறார் என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version