கேயன்.. பேர்ல.. சிவகார்த்திகேயன் பேர்ல எழுதுங்கோ.. தீயாய் பரவும் மீம்..! இது தான் மேட்டரு..!

சின்னத்திரையின் மூலம் வெள்ளி திரைக்குச் சென்ற நாயகன் சிவகார்த்திகேயனை பற்றி அதிக அளவு கூற வேண்டாம். சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இன்று இவரின் ஃபேன் என்றால் அது இவரின் கடுமையான உழைப்பால் இவருக்கு கிடைத்த கிரீடம்.

விஜய் ஒய்வு..

அந்த வகையில் தற்போது தமிழ் திரை உலகில் அசைக்க முடியாத இடத்தை பிடித்திருக்கும் சிவகார்த்திகேயன் தனது அற்புத நடிப்பு திறனால் தமிழகத்தில் இருக்கும் அனைவரது நெஞ்சிலும் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்து இருப்பதோடு எங்கள் வீட்டுப்பிள்ளை என்று செல்லமாக சொல்லக்கூடிய அளவு ரசிகப் படையை வைத்திருப்பவர்.

இந்நிலையில் இவரைப் பற்றிய மீம் ஒன்று இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது. இதற்குக் காரணம் என்னவென்றால் விரைவில் தளபதி விஜய், மற்றும் தல அஜித் திரை துறையில் இருந்து விலக இருப்பதாக செய்திகள் தீயாய் பரவி வருகிறது.

அந்த வகையில் நடிகர் விஜய் தன்னுடைய 69 ஆவது படத்தோடு திரை உலகுக்கு விடை கொடுக்க இருக்கிறார். அதனை அடுத்து தீவிரமாக அரசியலில் இறங்கி மக்களுக்கு சேவை செய்வதில் ஆர்வம் காட்டக்கூடிய நிலையில் விஜய் இருக்கிறார்.

அது போலவே தவ அஜித் தன்னுடைய விருப்பமான பைக் ரைடிங் சார்ந்த ஒரு நிறுவனத்தை உருவாக்கி அதன் மூலம் பைக் ரைட் களுக்கு சிறந்த அனுபவத்தை கொடுக்கக் கூடிய விதத்தில் ஒரு சுற்றுலா நிறுவனத்தை துவங்க திட்டமிட்டு இருப்பதோடு அதை நிர்வகிக்கவும் போவதாக தகவல்கள் வெளி வந்துள்ளது.

தல அஜித் அப்படி செய்து விட்டால் விரைவில் அவரும் சினிமாவில் இருந்து விடை பெற்று விடுவார், என்று திரை வட்டாரங்கள் கூறி வருகிறது. மேலும் நடிகர் அஜித் நடித்தது போதும் வாழ்க்கையை கொஞ்சம் நாள் வாழலாம் என்ற முடிவில் இருப்பதாகவும், ஆனால் தளபதி விஜய் தன்னை வாழ வைத்த மக்களுக்காக வாழலாம் என்ற முடிவில் இருப்பதாக கூறி இருக்கிறார்கள்.

கேயன் பேர்ல எழுதுங்கோ..

எப்படி எம்ஜிஆர், சிவாஜிக்கு பிறகு கமலஹாசன், ரஜினி இருந்தார்களோ, அவர்களைத் தொடர்ந்து விஜய், அஜித் இருந்தார்கள். இவர்கள் திரை உலகை விட்டு நீங்கி விட்டால் அடுத்த எந்த அந்தஸ்து யாருக்கு கிடைக்கும் என்ற பேச்சுக்கள் தற்போது வேகமாக பேசப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமா உலகில் இருந்து இரண்டு மிகப்பெரிய நட்சத்திரங்கள் தங்களுடைய ஓய்வு நேரடியாகவோ, மறைமுகமாகவோ அறிவித்துவிட்ட நிலையில் அடுத்த தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக யார் வருவார் என்ற கேள்வி தற்போது இணைய வட்டாரத்தில் வைரலாகி வருகிறது.

இதனை அடுத்து தற்போது அந்த இடத்திற்கு கே என் சிவகார்த்திகேயன் வருவார் என்ற ரீதியில் கே என் சிவகார்த்திகேயன் பெயரில் எழுதுங்கோ.. என்று சிவகார்த்திகேயன் கூறுவது போல ஒரு மீம் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

மேலும் இந்த மீம் ஆனது ரசிகர்களின் கவனத்தை அதிகளவு ஈர்த்து வரும் மீம் என கூறலாம். நீங்களும் இந்த மீமை பார்த்துவிட்டு உங்களது கருத்துக்கள் என்ன என்பதை கூறுங்கள். அத்தோடு இந்த மீம் தான் ரசிகர்களின் மத்தியில் அதிக அளவு பேசப்படும் ஒன்றாக மாறி உள்ளது.

சினிமாவில் எந்த விதமான பின்புறமும் இல்லாமல் இந்த அளவு தன் உழைப்பால் முன்னேறி இருக்கும் சிவகார்த்திகேயன் எனக்கு தமிழ் சினிமாவின் முன்னணி நாயகன் என்ற அந்தஸ்து கிடைத்தால் அதற்கு உரியவராக அவர் கண்டிப்பாக இருப்பார் என பலரும் பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version