அட.. வசீகர கண்களால் மயக்கிய நடிகை சிவரஞ்சனியின் கணவர் தளபதி விஜய்யின் சகோதரனா..?

தமிழ் திரை உலகில் வித்தியாசமான கண் அமைப்பை கொண்ட பூனைக்கண் அழகியாக திகழ்ந்த நடிகை சிவரஞ்சனியை பற்றி உங்களுக்கு நினைவில் இருக்கலாம். இவர் தனது வசீகரக் கண்ணால் இளசுகளின் இதயத்தில் தனக்கு என்று ஓர் தனி இடத்தை பிடித்துக் கொண்டவர்.

காந்த கண்ணழகி..

இந்த காந்த கண்ணழகி 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களோடு ஜோடி போட்டு நடித்து தனக்கு என்று ஒரு தனி இடத்தை தமிழக மக்கள் மத்தியில் பெற்றவர்.

இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக திகழ்ந்த பிரசாந்த், சத்யராஜ், பிரபு உள்ளிட்ட பல நடிகர்களோடு இணைந்து நடித்திருக்கிறார். தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்திருக்கும் இவர் ஒரு காலத்தில் பல படங்களில் பிஸியாக நடித்தவர்.

1990 முதல் 1999 வரை திரைப்படங்களில் மிகச்சிறப்பான முறையில் நடித்திருக்கிறார். தமிழை பொறுத்த வரை தலைவாசல், தங்க மனசுக்காரன், சின்ன மாப்பிள்ளை, பொன்விலங்கு, கலைஞன், தாலாட்டு போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.

மேலும் இவர் நடிப்பில் வெளி வந்த செந்தமிழ் செல்வன், ராஜதுரை போன்ற படங்களில் அற்புதமான முறையில் தனது நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இதனை அடுத்து இவருக்கு தமிழ் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

இவர் நடிக்கக்கூடிய காலகட்டங்களில் இவரைப் பற்றி அதிக அளவு கிசுகிசுக்கள் ஏதும் வந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வாரிசு நடிகர்..

இந்நிலையில் இவர் சினிமாவில் மார்க்கெட் குறையாத சமயத்திலேயே திருமணம் செய்து கொண்டு குடும்பம் குட்டி என்று செட்டிலாகி விட்டார். அந்த வகையில் இவர் திருமணம் செய்து கொண்டவர் தளபதி விஜய் அவர்களின் சகோதராக நடித்த நடிகர் என்பது பலருக்கும் தெரியாது.

இந்த நிலையில் இந்த விஷயமானது தற்போது இணையத்தில் லீக் ஆகி உள்ளது. மேலும் இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படி அவர் காதல் திருமணம் செய்து கொண்டது வேறு யாரும் இல்லை. பிரபல தெலுங்கு நடிகரான ஸ்ரீகாந்தை தான் காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது ஆந்திராவில் செட்டில் ஆகி இருக்கக்கூடிய சிவரஞ்சனிக்கு ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

சமீபத்தில் ஸ்ரீகாந்த் தளபதி விஜயின் வாரிசு திரைப்படத்தில் அவருக்கு அண்ணனாக நடித்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம். இந்த படத்தில் இவர் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். மேலும் தெலுங்கிலும் முன்னணி நடிகராக இருக்கக்கூடிய ஸ்ரீகாந்த் ஒரு மிகச்சிறந்த கலைஞராக விளங்குகிறார்.

தனது வசீகர கண்களால் ரசிகர்களை மயக்கிய நடிகை சிவரஞ்சினியின் கணவர் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தில் தளபதி விஜயின் சகோதரனாக நடித்த நடிகர் ஸ்ரீகாந்த் என்பது தற்போது ரசிகர்களுக்கு தெரிய வந்திருக்கிறது. மேலும் இவர்களுடைய குடும்ப புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இந்த புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் அட.. நம்ம.. பூனைக்கண் சிவரஞ்சனியா? இது என்று மகிழ்ச்சியோடு புகைப்படங்களை பார்த்து வருவதோடு அவர்கள் பார்த்த புகைப்படங்களை அவர்களது நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள். குடும்ப சகிதமாக சிவரஞ்சனி தற்போது மகிழ்ச்சியோடு இருக்கிறார் என்பது புகைப்படங்களை பார்த்ததுமே தெரிந்து விட்டது.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Exit mobile version