காதல் தோல்வி.. இதுவரை திருமணம் செய்யாத காரணம்..எஸ்.ஜே.சூர்யாவின் உண்மை கதையில் வெளியான தமிழ் படம் தெரியுமா..?

தற்போது தமிழ் சினிமாவில் வில்லனாக கலக்கி வரும் நடிப்பு அசுரன் என்ற பெயரை பெற்றிருக்கும் எஸ்.ஜே சூர்யா இன்று வரை திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார்.

திரை உலகில் ஆரம்ப நாட்களில் தன்னை ஓர் இயக்குனராக அடையாளப்படுத்திக் கொண்டவர். தனக்குள் ஒரு அபாரமான நடிப்புத் திறனை வைத்திருக்கிறார் என்பது தற்போது வெட்ட வெளிச்சம் ஆகக் கூடிய வகையில் ஜிகர்தண்டா 2 படத்தில் பட்டையை கிளப்பி இருக்கிறார்.

மேலும் இந்த படத்திற்கு முன் வெளி வந்த மார்க் ஆண்டனி படத்தில் அவரது நடிப்பு மக்கள் மத்தியில் பெரிய அளவு பேசப்பட்டது. 40 வயதை எட்டி இருக்கும், இவர் என்னும் திருமணம் ஆகாமல் இருந்தாலும் சந்தோஷமாக இருப்பதாகத் தான் கூறியிருக்கிறார்.

அடுத்து பலரும் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று கேட்க அவர் ஒரு பேட்டியில் தன் காதல் கதையை பகிர்ந்திருக்கிறார். ஏறக்குறைய இவரது காதல் கதை இவரது நடிப்பில் வெளி வந்த படமான அன்பே ஆருயிரே திரைப்படத்தைப் போலத்தான் உள்ளது.

மேலும் இந்த படம் இவர் காதலை தழுவி தான் எடுக்கப்பட்டது என்று கூட கூறலாம். இவருடைய உண்மையான லவ் ஸ்டோரியை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அந்த படத்தை பார்த்தாலே போதும் என்று அவர் கூறியிருக்கிறார். 

இந்த படத்தின் காதல் கதை எப்படி இருந்ததோ, அது போல் தான் இவரது வாழ்க்கையிலும் நடந்ததாம். மேலும் இரவு விருந்துக்காக இவருடைய காதலி ஏற்பாடு செய்ய அதே நேரத்தில் ஒரு பெரிய தயாரிப்பாளர் படத்தைப் பற்றி பேச எஸ்.ஜே சூர்யாவை அழைத்திருக்கிறார். 

எனவே எஸ்.ஜே சூர்யாவும் இரவு விருந்துக்கு அவருடைய காதலி இருந்த இடத்திற்கு சென்று தன் காதலியிடம் அவசரமான வேலை இருக்கிறது என்று சொல்லி அங்கிருந்து கிளம்பி விட்டார்.

இதனை அடுத்து இரவு 12 மணி வரை மீட்டிங் இருந்தது. அதை முடித்த கையோடு காதலியின் வீட்டுக்குச் சென்று கதவை தட்டி இருக்கிறார் எஸ்.ஜே சூர்யா. ஆனால் அவரின் காதலியோ இது ஒன்றும் சத்திரம் இல்லை என்று சொல்லி முகத்தில் அடித்தது போல கதவை மூடிவிட்டார்.

இப்போது மூடப்பட்ட தனது காதல் இன்று வரை மூடிய நிலையிலேயே உள்ளது என தன் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான சம்பவத்தை பகிர்ந்திருக்கிறார். இதனை அடுத்து முரட்டு சிங்கிளாக இருக்க காரணம் இதுதானா? என்று ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version