“கணவர் பிரசன்னா சொன்ன ஒரு வார்த்தை.. தேம்பி தேம்பி அழுத சினேகா..!”- தீயாய் பரவும் தகவல்..!

புன்னகை அரசி, பல்லழகி என்று ரசிகர்களால் பெரிதும் போற்றப்பட்ட நடிகை சினேகா ஹோம்லி கேரக்டர்களை செய்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர். இவர் தமிழில் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்திருக்கிறார்.

கோவா திரைப்படத்தில் நடிக்கும் போது இவருக்கும் நடிகர் பிரசன்னாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதனை அடுத்து பெற்றோர்களின் சம்மதத்தோடு இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.

தற்போது இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள்.மேலும் நடிகை சினேகா சுகிசிவம் இயக்கிய விரும்புகிறேன் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகம் ஆனவர்.

திரைப்படங்கள் மட்டுமல்லாமல் கணவனும், மனைவியும் இணைந்து பல விளம்பர படங்களில் நடித்திருக்கிறார்கள். இதனை அடுத்து சீரியல் இடைவேளைகளில் போடும் விளம்பரங்களில் சினேகா அனைவரது வீட்டுக்கும் வந்து விடுவார்.

திரை உலகில் வாய்ப்புக்கள் குறைய ஆரம்பித்த உடன் பிரபல தொலைக்காட்சிகளில் ரியாலிட்டி ஷோகளில் நடுவராக பணியாற்றி வருகிறார். இந்த சூழ்நிலையில் தற்போது வெங்கட் பிரபு இயக்க இருக்கும் தளபதி 68 திரைப்படத்தில் சினேகாவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாக கூறி வருகிறார்கள்.

சினேகா மற்றும் பிரசன்னா ஒரு நடன நிகழ்ச்சியில் நடுவராக செயல்பட்ட நிலையில் அந்த நிகழ்ச்சியில் நடனம் ஆடிய இரண்டு பேரும் வயதான கெட்டப்பில் ஆடி இருக்கிறார்கள். மேலும் அந்த நடனம் பார்ப்பவரை கவரும் வண்ணம் இருந்துள்ளது.

இதை அடுத்து பிரசன்னா தன் கருத்தை பதிவு செய்யும் போது வயதாகும் போதும் இப்படித்தான் நான் சினேகாவுடன் இணைந்திருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

இந்த வார்த்தையை கேட்டதும் சினேகா ஆனந்தக் கண்ணீர் விட ஆரம்பித்து விட்டார். மேலும் தன்னை கணவர் எந்த அளவு விரும்புகிறார் என்பது இந்த பதிலின் மூலம் தெரிந்து விட்டதாகவும் கூறி இருக்கிறார்.

பிரசன்னா, சினேகாவை பற்றி கூறிய இந்த கருத்து தான் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு இவர்களது காதலைப் பற்றி ரசிகர்கள் ஒரு ஒவ்வொருவரும் பேசி வருகிறார்கள்.

மேலும் கண்டதும் காதல் கொண்டு, ஓரிரு வாரங்களில் திருமணம் செய்து கொண்டு, அதே கையோடு விவாகரத்து பெற்று வரும் சூழலில் இவர்களது வலுவான காதலை பார்த்து அனைவரும் பாராட்டுகளை தெரிவித்து வண்ணம் இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version