நடிகை சினேகாவின் முதல் கணவர் யார்..? ஏன் பிரிந்தார்..? ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..!

புன்னகை அரசி என்று கே ஆர் விஜயாவை அனைவரும் அன்போடு அழைத்து வந்தார்கள். அவரைத் தொடர்ந்து நடிகை சினேகாவை ஜூனியர் புன்னகை அரசி என்று ரசிகர்கள் அனைவரும் ஆசையாக அடைமொழி தந்து அழைத்தார்கள்.

சினேகாவின் உண்மையான பெயர் சுகாசினி ராஜாராம் நாயுடு என்பதுதான். இவர் திரைப்படத்தில் நடிப்பதற்காக தனது பெயரை சினேகா என்று மாற்றி அமைத்துக் கொண்டார்.

புன்னகையரசி சினேகா..

புன்னகை அரசியாக திகழும் நடிகை சினேகா தமிழ், தெலுங்கு, மலையாள திரைப்படங்களில் நடித்திருக்கிறார். குடும்பப் பாங்கான கேரக்டர்களில் மிகவும் பக்குவமாக நடித்து வரக்கூடிய இவர் ரேவதி, நதியாவை போலவே கவர்ச்சியை காட்டாமல் ஹோம்லி லுக்கில் இருப்பவர்.

இவர் மம்முட்டியோடு இணைந்து ஆனந்தம் படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் பாடலின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தார். இதனை அடுத்து இந்த படத்தில் நடித்ததற்காக இவருக்கு தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகை விருது கிடைத்தது.

மேலும் இவர் புன்னகை தேசம், உன்னை நினைத்து, விரும்புகிறேன் போன்ற படங்களில் நடித்து விருதுகளை பெற்றிருக்கிறார். இவர் நடிப்பில் வெளி வந்த பார்த்திபன் கனவு இன்று வரை ரசிகர்களின் விருப்ப படமாக உள்ளது.

இது வரை கிட்டத்தட்ட 70 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் நடிகை சினேகா சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களுக்கு நடுவராக வந்து அசத்தியிருக்கிறார். இவர் 2009 ஆம் ஆண்டு பிரசன்னாவுடன் அச்சம் உண்டு அச்சமுண்டு என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

இந்த படத்தில் நடிக்கும் போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட 2012 ஆம் ஆண்டு பெற்றோர்களின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டார்கள். இதனை அடுத்து கணவன், மனைவியாக பல விளம்பரங்களில் இருவரும் இணைந்து நடித்திருக்கிறார்கள்.

நின்று போன திருமணம்..

எனினும் நடிகை சினேகா நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே வேறொருவருடன் இவருக்கு நிச்சயதார்த்தம் நடந்திருக்கும் கதை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதை அறிந்து கொண்ட பலரும் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள். அப்படி யார் உடன் இவருக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. ஏன் அந்த நிச்சயதார்த்தம் முடிந்த திருமணம் தடையானது? என்பது போன்ற பலவிதமான கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருகிறார்கள்.

இதற்கான விடையை பிரபல நடிகர் கூறி இருக்கிறார். அவரது பதில் நடிகை சினேகா முதன் முதலில் தயாரிப்பாளர் நாக் ரவியை திருமணம் செய்ய இருந்தார். கிட்டத்தட்ட திருமணமே முடிந்துவிட்டது என்று தான் கூற வேண்டும்.

ஏனென்றால் இருவரும் திருமணம் செய்வதற்கான நிச்சயதார்த்தத்தை நடத்தி முடித்து விட்டார்கள். மேலும் இருவரும் வைர மோதிரத்தை மாற்றிக் கொண்டார்கள்.

இந்த நிச்சயதார்த்தம் முடிந்து இரண்டு மாதங்களில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேற்றுமையின் காரணமாக திருமணம் செய்து கொள்ளாமல் நாக் ரவியை சினேகா பிரிந்து இருக்கிறார். இதனை அடுத்து தான் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

பொதுவாகவே நமது ஊரில் நிச்சயதார்த்தம் முடிந்து மோதிரம் மாற்றிக் கொண்டாலே பாதி திருமணம் முடிந்துவிட்டது என்று தான் அர்த்தம். அதாவது இருவரும் புருஷன், பொண்டாட்டி என்று தான் சொல்வார்கள். அதற்கான அர்த்தமும் அது தான்.

ஆக தயாரிப்பாளர் நாக் ரவியை தான் சினேகாவின் முதல் கணவர்.எனினும் கருத்து வேறுபாடு காரணமாக திருமணத்திற்கு முன்பே பிரிந்து விட்டனர் என்று பிரபல நடிகரும் சர்ச்சைக்குரிய பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய தனது வீடியோ ஒன்றில் எந்த ரகசியத்தை உடைத்து இருக்கிறார்.

இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் சினேகா வாழ்க்கையில் இப்படி ஒரு விஷயம் நடந்திருக்கிறதா? இது வரை எங்களுக்கு தெரியாமல் போனதே என்று இந்த விஷயம் பற்றி தான் பரவலாக பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version