உங்களுக்கு வயசே ஆகாதா..? 40 வயசு தாண்டியும் கிளாமர்ல சுர்ர்ர்…ன்னு சினேகா..!

தமிழ் சினிமாவில் சில நடிகைகள் மட்டுமே எப்போதும் பழைய அழகு மாறாமல், வயது ஏற, ஏற இன்னும் சொக்க வைக்கும் அழகில் ரசிகர்களை தடுமாற வைக்கின்றனர். அந்த வகையில் சினிமாவில் பிஸியாக நடித்த காலகட்டத்திலும், இரண்டு குழந்தைகளுக்கு தாயான நிலையில் 40 வயது கடந்த நிலையில் இப்போதும் தனது வசீகர அழகில் ரசிகர்களை திணறடிக்கிறார் நடிகை சினேகா.

சுசி கணேஷ் இயக்கிய விரும்புகிறேன் படத்தில் பிரசாந்த் ஜோடியாக சினேகா நடித்தார். முதல் படத்திலேயே ரசிகர்களின் மனம் கவர்ந்தார். அடுத்து ஆனந்தம், ஏப்ரல் மாதத்தில், போஸ், வசீகரா, வசூல் ராஜா எம்பிபிஎஸ், பிரிவோம் சந்திப்போம், கிங், பார்த்திபன் கனவு போன்ற பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

செல்வராகவன் இயக்கத்தில், புதுப்பேட்டை படத்தில் விலைமாது கேரக்டரில் சினேகா நடிப்பு மிகவும் கவனிக்கப்பட்டது. பீக் மார்க்கெட் உள்ள நடிகையாகவும், குடும்ப பாங்கான கதைகளில் நடித்து வந்த நிலையில், திடீரென இப்படி ஒரு கேரக்டரில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார் சினேகா.

நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட சினேகா இரண்டு பிள்ளைகளுக்கு தாயாகி விட்டார். எனினும் இன்னும் சினிபீல்டில் இருந்துக்கொண்டு தான் இருக்கிறார். பட்டாஸ், வேலைக்காரன் போன்ற படங்களில் நடித்த அவர், இப்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய்க்கு ஜோடியாக, கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார்.

அடிக்கடி சமூகவலைதளங்களில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை அப்டேட் செய்து ரசிகர்களை தனது வசீகர கவர்ச்சியால் திணறடித்து வருகிறார் சினேகா. அந்த வகையில் இப்போது இந்த கிறங்கடிக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை மூடு கிளப்பி விட்டுள்ளார் சினேகா. 40 வயது கடந்தும் இப்படி ஒரு அழகா, என ரசிகர்கள் பலரும் பித்து பிடித்தது போல புலம்பி வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version