இரண்டு குழந்தைகளுக்கு அம்மா செய்யும் வேலையா இது..? சினேகாவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..!

நடிகை சினேகா, தமிழ் சினிமாவில் 1990களில் பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.

பிரசாந்த் நடித்த விரும்புகிறேன் படத்தில் அறிமுகமானார். முதல் படத்திலேயே அவரது வசீகர தோற்றம் ரசிகர்களுக்கு பிடித்துப் போனதால் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆனார்.

இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் ஆனந்தம் படத்தில், அப்பாஸ் ஜோடியாக நடித்தார். பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம் பாடல் காட்சியில் நடித்து இன்னும் பிரபலமானார்.

புன்னகை இளவரசி

தொடர்ந்து புன்னகை இளவரசி சினேகா என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட சினேகா பல படங்களில் நடித்து, முன்னணி நடிகையாக மாறினார்.

பம்மல் கே சம்பந்தம், வசூல் ராஜா எம்பிபிஎஸ், வசீகரா, புதுப்பேட்டை, ஜனா, பார்த்திபன் கனவு, போஸ், ஏப்ரல் மாதத்தில், பிரிவோம் சந்திப்போம், ஆட்டோகிராப் என தொடர்ந்து படங்களில் நடித்த சினேகா, நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

திருமணத்துக்கு பிறகு பட்டாஸ், வேலைக்காரன், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற படங்களில் நடித்த சினேகா, சில ஆண்டுகளாக டிவி ஷோக்களில் நடுவராக பங்கேற்று வருகிறார்.

மிக விரைவில் சினேகாலயா சில்க்ஸ் என்ற புதிய ஜவுளிக்கடை ஒன்றையும் துவங்க இருக்கிறார். வரும் 12ம் தேதி அதன் திறப்பு விழா நடைபெற உள்ளது.

இந்நிலையில், இரண்டு குழந்தைகளுக்கு தாயாகியிருக்கும் நடிகை சினேகா வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

சினிமாவில் மார்க்கெட் இழந்த நடிகைகள் சிலர், கடைசியில் வெப் சீரிஸ்களில் நடிக்க வந்து விடுகின்றனர்.

டிவி சீரியல்களில் நடித்தால் கவுரவக் குறைச்சலாக நினைக்கும் அவர்கள், வெப் சீரிஸ் நடிப்பதை சினிமா போல கருதுகின்றனர்.

ஆனால் வெப் சீரிஸ்களில் பெரும்பாலும் வன்முறை, ஆபாசம் நிறைந்துள்ளது. குறிப்பாக உதட்டு முத்தக் காட்சிகள், படுக்கையறை காட்சிகளில் தாராளம் காட்டப்படுகிறது.

அப்போதுதான் பலரையும் கவர்ந்து இழுத்து, வெப் சீரிஸ் பார்வையாளர்களை அதிகரிக்க செய்ய முடியும்.

ரொமான்ஸ் காட்சிகளில்

இந்த சூழலில், குடும்ப குத்துவிளக்கான நடிகை சினேகாவும் வெப் சீரியலில் நடிக்க வருவது, பலருக்கும் அதிர்ச்சியை தந்திருக்கிறது.

அதுவும் தன்னைவிட வயதில் குறைவான நடிகருடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க சம்மதம் தெரிவித்து இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

விரைவில் இந்த வெப் சீரிஸ் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விவரம் இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாகிவிட்ட நிலையில் தன்னைவிட வயது குறைவான நடிகர் ரொமான்ஸ் காட்சியில் சினேகா நடிப்பதா என்று வாயை பிளந்து வருகின்றனர் ரசிகர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version