“அவன் இறந்த பிறகு.. அவனை நினைத்து அழாத நாளே இல்ல..” – ரகசியம் உடைத்த ஸ்ரீதேவி அஷோக்..!

சின்னத்திரை நடிகை ஸ்ரீதேவி அசோக் முதலில் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து பின்னர் சீரியல்களில் எண்ட்ரி கொடுத்தார்.

தங்கம், கஸ்தூரி போன்ற சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்த இவருக்கு ராஜா ராணி சீரியல் நல்ல வரவேற்பு பெற்றுக்கொடுத்தது. துணை நடிகையாகவும், வில்லி கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை மிரட்டிய இவர் தன்னுடைய நண்பர் அசோக் சிண்டலா உடன் திருமணம் செய்து கொண்டார்.

தங்களுக்குள் எப்படி பழக்கம் ஏற்பட்டது என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர்.. எனக்கு வளர்ப்பு பிராணிகள் என்றால் மிகவும் பிரியம். ஒரு முறை என்னுடைய வளர்ப்பு நாய்க்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது.

அந்த நேரத்தில் நான் பெங்களூரில் இருந்தேன். என்னுடைய முகநூல் பக்கத்தில் பெங்களூருவில் யாராவது இருந்தால் உதவி செய்யுங்கள் என்று பொதுவாக ஒரு பதிவை எழுதியிருந்தேன்.

அப்போது முதல் ஆளாக என்னை தொடர்பு கொண்டவர் தான் அசோக். அப்படித்தான் எங்களுடைய நட்பு ஆரம்பித்தது. நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வோம் என்று ஒருநாளும் நினைத்து பார்த்தது கிடையாது.

நண்பர்களாகத்தான் பழகி வந்தோம். திடீரென ஒரு நாள் அசோக் அவருடைய குடும்பத்தினருடன் என்னுடைய வீட்டிற்கு வந்து பெண் கேட்டார். இருவருக்கும் பிடித்துப் போனதால் திருமணம் செய்து கொண்டோம் என பதிவு செய்திருந்தார்.

மேலும் ஒருமுறை படப்பிடிப்பு முடித்துவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்த பொழுது விபத்து ஒன்றில் சிக்கிய சாலையோர நாய் ஒன்றை கண்டோம். அதனை மீட்டு சிகிச்சை செய்து எங்களுடனே வைத்துக்கொண்டோம்.

கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் எங்களுடன் அவன் இருந்தான்.. நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வளர்ந்து கொண்டிருந்தான்.. ஆனால் திடீரென ஒரு நாள் இறந்து விட்டான்.

இது குறித்து விசாரித்த பொழுது சிறுநீரக பிரச்சனையால் இறந்துவிட்டான் என்று தெரியவந்தது. அவனுடைய நினைவுகளை நினைத்து அழாத நாளே கிடையாது.. என்று கண்ணீர் மல்க பேசியிருக்கிறார் ஸ்ரீதேவி அசோக். இவருடைய இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version