இப்படித்தான் 11 கிலோ உடல் எடை குறைத்தேன்..! ரகசியம் உடைத்த ஸ்ரீதேவி அசோக்..!

பெரிய திரையை விட சின்ன திரையில் மவுசு என்று அதிகரித்து விட்டது. திரைப்படங்களை விட சீரியல்களில் அதிகளவு மனதை செலுத்தி வரும் இல்லத்தரசிகள் மத்தியில் தற்போது சின்னத்திரை நாயகிகள் நல்ல பெயரை பெற்று வருகிறார்கள்.

ஸ்ரீதேவி அசோக்..

அந்த வகையில் சின்னத்திரை சீரியல்களில் தற்போது நடித்து வரும் ஸ்ரீதேவி அசோக் விஜய் தொலைக்காட்சியில் காற்றுக்கென்ன வேலி, பொன்னி போன்ற தொடர்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டவர்.

இவரது சீரிய நடிப்பை பார்ப்பதற்காக இல்லத்தரசிகள் அனைவரும் என்ன வேலை இருந்தாலும் அதை அப்படியே போட்டுவிட்டு, இவரது சீரியலை காண கூடிய ஆவல் மிக்கவர்களாக இருக்கிறார்கள்.

மேலும் ஸ்ரீதேவி அசோக் சன் தொலைக்காட்சிகளிலும் நிறைய தொடர்களில் நடித்திருக்கிறார். சமூக வலைத்தளங்களில் எப்போதும் பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி Instagram பக்கத்தில் வீடியோக்களையும், புகைப்படங்களையும் குடும்பத்தோடு இருக்கின்ற வகையில் வெளியிடுவார்.

குழந்தை பெற்ற பிறகு இவர் தனது உடல் எடையை வெகுவாக குறைத்து இருக்கிறார். தற்போது இவரை பார்த்து பல பெண்களும் ஆச்சரியப்பட கூடிய அளவு உடல் எடை குறைந்து இருப்பதால் பலரும் இவரிடம் எப்படி உடல் எடையை குறைத்தீர்கள் என்ற கேள்வியை முன் வைத்து இருக்கிறார்கள்.

உடல் எடை குறைப்பு..

பொதுவாகவே கர்ப்பமாக இருக்கும் பெண்கள் உடல் எடை கூட வேண்டும் என்பதற்காக கூடுதல் கவனத்தோடு குடும்பத்தார் மூலம் கவனிக்கப்படுவதினால் உடல் எடை அதிகரித்து விடும்.

இந்த எடை குழந்தை பெற்ற பிறகும் குறையாமல் நீடித்து பல பெண்களை பாடாய்படுத்தி விடும். அந்த வகையில் குழந்தை பெற்ற பிறகு உடல் எடை அதிகரித்து நிலையில் இருந்த ஸ்ரீதேவி அசோக் தற்போது தன் உடலை வெகுவாக குறைத்து இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

அந்த வகையில் இவர் முதல் குழந்தைக்குப் பிறகு 11 கிலோ அளவு உடல் எடையை குறைத்து இருக்கிறார் என்ற விஷயத்தை கேள்விப்பட்டு எல்லா பெண்களுமே இது எப்படி சாத்தியம் என்று எண்ணி வருகிறார்கள்.

இந்நிலையில் இவர் உடல் எடை எப்படி குறைந்தது. அதற்கான டயட் என்ன என்பதை கூறியிருப்பதை அடுத்து அந்த டயட்டை ஃபாலோ செய்தால் தங்களது எடையை எளிதில் குறைத்து விடலாம் என்று நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.

உடல் எடையை குறைப்பதற்காக இவர் கொஞ்சம் பழங்கள், மதிய உணவாக பிரவுன் ரைஸ், சாம்பார், கூட்டு, பொரியல் என சைவ உணவுகளை விரும்பி சாப்பிட்டிருக்கிறார்.

அத்தோடு மாலை நேர ஸ்நாக்ஸ் ஆக கருப்பு கொண்டை கடலை, சோயா பீன்ஸ், ராஜ்மா போன்ற பருப்பு வகைகளை அதிகளவு சேர்த்துக் கொண்டதின் மூலம் பசி எடுப்பது தடைப்பட்டு உடலுக்கு தேவையான நார் சத்துக்களும் புரோட்டீனும் கிடைத்துள்ளது.

இரவு உணவை காலம் தாழ்த்தி உண்ணாமல் ஏழு மணிக்கு முன்பே சாப்பிட்டு விடுவதோடு மாதத்திற்கு ஒருமுறை காலையிலிருந்து மாலை வரை விரதம் இருந்து வெறும் தண்ணீரை மட்டுமே குடித்து வந்ததன் காரணத்தால் தான் உடல் எடை வெகுவாக குறைந்துள்ளது என கூறியிருக்கிறார்.

நீங்களும் இந்த வழிமுறையை ஃபாலோ செய்தால் கட்டாயம் உங்கள் உடல் எடையும் நிச்சயமாக குறையும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. எனவே மறக்காமல் இந்த முறையை நீங்கள் கடைப்பிடித்து பாருங்கள் மாற்றம் உங்களுக்குள் நிச்சயம் ஏற்படும்

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version