இது தான் ஒரிஜினல் கம்பேக்..! STRன் தரமான சம்பவம்..!

லிட்டில் சூப்பர் ஸ்டார் STR-ரின் பத்து தல படம் ரிலீஸ் ஆகி ஒரு வருடம் கடந்து விட்ட நிலையில் அடுத்த படத்திற்கான ஏற்பாடுகள் நடந்து விட்டதா? ஷூட்டிங் போகிறதா? என்பது போன்ற விஷயங்கள் தெரியாத நிலையில் ரசிகர்கள் அவற்றைப் பற்றி தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறார்கள்.

லிட்டில் சூப்பர் ஸ்டார் சிலம்பரசனை பொறுத்தவரை திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தப்பட்டு, ஹீரோவாக தமிழ் திரைப்படங்களில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்த தான் லிட்டில் சூப்பர் ஸ்டார் பட்டம் கிடைத்தது.

அவரது திரைப்படம் அடுத்தடுத்து வெற்றிகளை தந்ததை அடுத்து, பன்முக திறமையை கொண்ட இவர் வல்லவன் என்ற திரைப்படத்தை இயக்கி அதில் மிகச் சிறந்த பெயரை பெற்றார்.

ஆனால் அந்த படம் எடுக்கும் போது விதி விளையாடியது என கூறலாம். இந்த படத்தில் ஹீரோயினியாக நடித்த நயன்தாராவுடன் காதல் கொண்டதால் திரைப்படங்களின் மீது செலுத்தி வந்த கவனத்தை சிதற விட்டார்.

இந்த காதல் பிரேக்கப்பில் முடிந்ததால் மீண்டும் வந்தவர், மீண்டும் ஹன்சிகாவுடன் காதலில் விழுந்தார். இதனை எடுத்து பிரச்சனைகள் இவரை சூழ்ந்து கொண்டதால் திரைப்பட வாய்ப்புகளை இழந்தார்.

மேலும் உடல் எடை எக்கச்சக்கமாக போட்ட இவரால் மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்ப முடியாது என்று பலரும் கிண்டல் செய்து வந்த நிலையில், மாநாடு படத்தில் கம்பேக் கொடுத்தார்.

பின்னர் வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்புவா? இது என்று கேட்கக்கூடிய அளவு உடல் எடையை குறைத்து மாஸ் காட்டினார். இதனை அடுத்து பத்து தல படத்தில் நடித்திருந்தவர் அதனை அடுத்து எந்த படப்பிடிப்பிலும் கலந்து கொள்ளவில்லை.

அடுத்து இவர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். இந்த படத்தை ராஜ் கமல் பிக்சர்ஸ் சார்பில் கமலஹாசன் தயாரிக்கிறார்.

இந்தத் திரைப்படமானது ஹாலிவுட் படமான 300 படத்தை மையமாகக் கொண்டு இயக்கப்பட உள்ளது. பிரம்மாண்டமான வரலாறை படைக்கக்கூடிய வகையில் இந்த படம் இருக்கும் என கூறப்படுகிறது.

இரட்டை கதாபாத்திரம் உள்ள படம் என்பதால் இதில் சிம்பு நடிப்பாரா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். மேலும் ஒரு கதாபாத்திரத்திற்கு எடை அதிகமாக போட வேண்டி உள்ளதால் சிம்பு அந்த பணியில் தற்போது ஈடுபட்டு வருவதாக தெரிய வந்துள்ளது.

எனவே கண்டிப்பாக இந்த படத்தில் சிம்பு நடிப்பார் விரைவில் படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதற்கு முன்பு மன்மதன் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version