திரையுலக அஷ்டவதானி என்ற பட்டத்துக்கு சொந்தக்காரர் டி ராஜேந்தர். புலிக்கு பிறகு புலிதான் என்பதை நிரூபிக்கும் விதமாக லிட்டில் சூப்பர் ஸ்டாராக களத்தில் இறங்கியவர் அவரது மகன் சிம்பு என்கிற சிலம்பரசன்.
கடந்த 1980களில், டி ராஜேந்தர் படம் என்றால், தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் திருவிழா போல காணப்படும். காதல், குடும்பம், பாசம், ஆக்சன், சங்கீதம் என தனது படங்களை சிறந்த படைப்பாக தந்தவர் டி. ராஜேந்தர்
கதை திரைக்கதை வசனம் பாடல்கள் இசை டைரக்சன் தயாரிப்பு என சகலவிதங்களிலும் ரவுண்டு கட்டி அடித்து, வெற்றி மாலைகளை பெற்றவர் டி ராஜேந்தர்.
அவரது உறவை காத்த கிளி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் டிஆரின் பல படங்களில் கலக்கிய சிலம்பரசன், 1999ம் ஆண்டில் மோனிஷா என் மோனலிஷா என்ற படத்தில் வாலிபராக காட்சியளித்தார்.
அடுத்து தொட்டி ஜெயா, சரவணா, மன்மதன், தம், காதல் அழிவதில்லை, வந்தா ராஜாவ தான் வருனே், போடா போடி, கோவில், வாலு, ஒஸ்தி, சிலம்பாட்டம், வானம், செக்கச் சிவந்த வானம், ஈஸ்வரன், விண்ணைத் தாண்டி வருவாயா என பல வெற்றிப் படங்களை கொடுத்தார்.
வல்லவன், மன்மதன், வெந்து தணிந்தது காடு, மாநாடு என அவர் கதாநாயகனா நடித்த பல படங்கள் பலத்த வெற்றியை பெற்றன.
அப்பாவை போலவே மகனும், திரைக்களத்தில் புகுந்து விளையாடினர். சிறந்த கலைஞன் என்பதை பல படங்களில் நிரூபித்தார்.
சிம்பு..
முதலில் சிலம்பரசன் என்று அழைக்கப்பட்ட அவர், பிறகு ரசிகர்களாலும் தமிழ் சினிமா சார்ந்தவர்களாலும் சிம்பு என அழைக்கப்பட்டார்.
இப்போது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில், ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் சிம்பு 48 படத்தில் நடித்து வருகிறார். இது ஒரு ஹிஸ்டாரிக்கல் படம் என்று சொல்லப்படுகிறது.
இந்த படம் 2 பாகங்களாக எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிய வந்துள்ளது.
STR 50..
இந்நிலையில், தனது 50வது படத்தை சிம்புவே டைரக்ட் செய்து, நடிக்கவும் திட்டமிட்டுள்ளார். STR 50.. என தற்காலிக பெயரிடப்பட்டுள்ள இந்த படம், அவர் ஏற்கனவே நடித்து, திரைக்கதை எழுதிய படமான மன்மதன் படத்தின் 2ம் பாகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஏனெனில் மன்மதன் படத்தில் இரட்டை வேடத்தில், சைக்கோ கொலைக்காரனாக சிம்பு அசத்தியிருந்தார். இதில் அப்பாவி சகோதரன் சிம்பு இறந்து போக, மற்றொரு சிம்பு, ஆண்களை ஏமாற்றும் பெண்களை பழிவாங்குவதுதான் கதை.
அதனால் எஸ்டிஆர் 50 வேற லெவலில் தரமான சம்பவமாக இருக்கும் என்பதால் சிம்பு ரசிகர்கள் இப்போதே படம் குறித்த ஆர்வத்தில் காணப்படுகின்றனர்.
இப்போது சிம்புவை தெரியும். உங்களுக்கு பழைய சிம்பு அதாவது மன்மதன் சிம்புவை தெரியுமா என்ற வகையில் எஸ்டிஆர் 50 படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்டை சிம்பு ரசிகர்கள் மாஸ் ஆக வைரலாக்கி வருகின்றனர்.