வாய் எடுக்காம குடுக்கலாம்ன்னு ட்ரை பண்ணேன்.. ஆனால்.. வைரலாகும் சுஜிதாவின் வீடியோ..!

குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்தவர் பேபி சுஜிதா. முந்தானை முடிச்சு படத்தில், பாக்யராஜின் கைக்குழந்தையாக இருப்பது இவர்தான்.

பூவிழி வாசலிலே படத்தில், வில்லன் கொல்ல துரத்தும் குழந்தையாக நடித்ததும் சுஜிதான். காதல் பரிசு படத்தில் அம்பிகாவின் குழந்தையாகவும் நடித்திருப்பார் சுஜிதா.

தமிழில் மட்டுமின்றி மலையாளத்திலும் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக சுஜிதா நடித்திருக்கிறார்.

அதன்பின் வளர்ந்த பின், இளம்பெண்ணாக தமிழில் சில படங்களில் சுஜிதா நடித்திருக்கிறார். ஆனால் இப்போது விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்துதான், மக்கள் மத்தியில் அதிக பிரபலமாகி வருகிறார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் சுஜிதா தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிடுவது வழக்கம்.

அப்படி சமீபத்தில் குடும்பத்துடன் கோவைக்கு சென்றபோது எடுத்த வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

கோயம்புத்தூர்ல இருக்கற எங்க தோட்டத்துக்கு போனோம். தோட்டத்துல எங்க சின்ன அண்ணன் இளநீர் பறிச்சு எங்களுக்கு வெட்டிக் கொடுத்தார்.

இளநீர் வெயிட் பண்ணி குடிக்கறதுல ஒரு சுகம்தான். வெயிட் பண்ணி, வெயிட் பண்ணி கடைசியா என் இளநீர் என்கிட்ட வந்துச்சு.

ஒரே கல்ப்புல அதாவது வாய் எடுக்காம குடிக்கலாமுன்னு ஒரு சேலஞ்ச். இப்ப பாருன்னு சொல்லிட்டு ஆரம்பிச்சேன். ஐந்து செகண்ட்தான். அதுக்கு மேல முடியல.

ஆனா என் பையன் அந்த சேலஞ்சுல என் பையன் வாய எடுக்காமல் இளநீரை முழுசா குடிச்சு ஜெயிச்சுட்டான்,

நான் வாய் எடுக்காம குடிக்கலாமுன்னு ட்ரை பண்ணினேன், ஆனா முடியலை என்று கூறியிருக்கிறார் சுஜிதா. இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version